இந்திய கிரிக்கெட்டில் இவ்வளவு கேவலம் நடக்குதா? ரகசிய கேமிராவில் வசமாக சிக்கிய சேத்தன் சர்மா

0
741

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் சேத்தன் சர்மாவை ரகசிய கேமரா வைத்து பத்திரிக்கையாளர்கள் சிக்க வைத்திருக்கிறார்கள். இந்த வீடியோ மூலம் இந்திய அணி எவ்வளவு கேவலமாக நிர்வாகிக்கப்பட்டது என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. முக்கியமாக விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் கங்குலியை அவர் எதிர்த்துக் கொண்டது தான் என்று சேத்தன் ஷர்மா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு,   விராட் கோலி கிரிக்கெட்டை விட நான்தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்தார். டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய போது கங்குலி அவரை வீடியோ கான்பரன்சில் தொடர்பு கொண்டு ஒரு மீட்டிங் நடத்தினார். அதில் நாங்கள் ஒரு எட்டு பேர் பங்கேற்றோம். அப்போது கேப்டன் பதவியை விட்டு செல்ல வேண்டாம் என கங்குலி கூறினார்.

- Advertisement -

ஆனால் அதனை விராட் கோலி கேட்கவில்லை. இதனை அடுத்து ஒருருநாள், டெஸ்ட் போட்டிக்கு ஒரே கேப்டன் தேவையில்லை என அவரை ஒருநாள் கேப்டன் பதவியை விட்டு நீக்கி விட்டோம். ரோகித் சர்மாவுக்கு சாதகமாக கங்குலி அவரை  கேப்டனாக கங்குலி கொண்டு வரவில்லை.  விராட் கோலியை பிடிக்காத  காரணத்தினாலே ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.  இந்திய அணியி பல்வேறு வீரர்கள் முழு உடல் தகுதியை எட்டாமல் அணிக்குள் வந்து விளையாடினார்கள்.

மேலும் பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஸ்டெராய்டு மருந்துகளை பயன்படுத்திக் கொண்டு உடல் தகுதியை எட்டி விட்டதாக காண்பித்துக் கொண்டார்கள். இந்த ஸ்டெராய்டு மருந்து பயன்படுத்தினால் ஊக்க மருந்து சோதனையில் கூட தப்பித்து விடலாம். இப்படிதான் இந்திய அணியில் பலர் விளையாடுகிறார்கள். ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகுவதற்கு முன் என் வீட்டிற்கு வந்து என்னிடம் அவருடைய எதிர்காலம் குறித்து பேசினார்.

என்னுடைய சோபாவில் அமர்ந்து ஹர்திக் பாண்டியா தூங்கினார். தீபக் ஹூடா , உமேஷ் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் எல்லாம் என்னுடைய வீட்டிற்கு வந்து பேசுவார்கள். அவர்கள் என்னை நம்பினார்கள் என்று சேத்தன் சர்மா பேசி இருக்கிறது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது .இதன் மூலம் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தன்னிடம் நல்ல உறவில் உள்ள வீரர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ள சேத்தன் சர்மா அதிரடியாக நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.