“இந்த அடி எப்படி இருக்கு?! நீங்க பைனல் வரதுக்கு எங்கள நம்ப கூடாது!” – பாகிஸ்தான் ரசிகர்கள் மீது கவாஸ்கர் கடுமையான விமர்சனம்!

0
3056

இந்த முறை ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அணியாக பாகிஸ்தான் அணி இருந்தது!

பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பை தொடருக்கு வருவதற்கு முன்னாள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து அசத்தலாக உள்ளே வந்தது.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் அணியில் உலகத்தரமான வேகப்பந்து வீச்சு தாக்குதல் இருந்தது. இவர்களின் வேகப்பந்துவீச்சு தாக்குதல் எந்த மாதிரியான ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதாக கூறப்பட்டது.

இது மட்டும் இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வந்தார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் முதல் பத்து இடங்களில் இருந்தார்கள்.

இப்படி எல்லாம் இருந்த பாகிஸ்தான் அணி, இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்து இறுதிப் போட்டிக்கு வர முடியாமல் வெளியேறியது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக இந்தியா இலங்கை அணிக்கு எதிராக வேண்டும் என்றே தோற்க விரும்பியது, பாகிஸ்தானை வெளியேற்ற திட்டம் போட்டது என்று கூறி வந்தார்கள்.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ள நிலையில் பேசி உள்ள சுனில் கவாஸ்கர் “இலங்கைக்கு எதிராக 213 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டம் இழந்த பொழுது, பாகிஸ்தானை வெளியே அனுப்பவே இந்தியா இப்படி வேண்டுமென்று விளையாடியது என்று கதறி கொண்டு இருந்தவர்கள் கன்னத்தில் இப்பொழுது இந்தியா ஓங்கி அறைந்திருக்கிறது

இப்படி இந்தியா வேண்டுமென்று இலங்கை அணி உடன் தோல்வி அடைந்து இருந்தால், பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போட்டி மழையால் டிரா ஆகியிருந்தால், இந்திய அணியால் எப்படி இறுதிப் போட்டிக்கு வந்திருக்க முடியும்? இப்படி இருக்கும் பொழுது பாகிஸ்தான் மக்கள் எப்படி இப்படி நினைக்கிறார்கள்?

2019 ஆம் ஆண்டு லீக் போட்டி என்பது இங்கிலாந்துக்கு எதிராக இதே போல் இந்தியா அணி தோற்க நினைத்தது என்று பேசினார்கள். இந்தியா சதி கோட்பாட்டை பின்பற்றியதாகச் சொன்னார்கள். இதற்காக தோனி மெதுவாக பேட்டிங் செய்தார் என்று குற்றச்சாட்டை சொன்னார்கள். இந்த முட்டாள்கள் இந்தியாவால்தான் பாகிஸ்தானால் அரையறுதியில் இருக்க முடியவில்லை என்று நம்பினார்கள்.

உலகக் கோப்பைக்கு அணிகள் வரும்பொழுது அவர்கள் இறுதிப் போட்டிக்கு செல்வதைதான் முக்கியமாக நினைப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் சிறப்பாக விளையாடி செல்லுங்கள். நீங்கள் ஏன் இந்தியாவை நம்பி இருக்க வேண்டும்?!” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்!