“ODI கிரிக்கெட்டில் எப்படி ரன் அடிக்கிறதுனு சூரியகுமார் மண்டையில் இல்லை” – பேட்டிங் பயிற்சியாளர் அதிரடியான தாக்கு!

0
568
Surys

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் சூரிய குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அறிவிக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களில் இவருக்கு இடம் அளித்ததும் இருக்கிறது!

சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் தற்பொழுது தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய கதை வேறு மாதிரியானதாக இருக்கிறது. 26 போட்டிகளில் 24 ஆவரேஜில் 511 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

- Advertisement -

அதே இவருக்கு போட்டியாக மிடில் ஆர்டரில் இருந்த சஞ்சு சாம்சன் 13 போட்டிகளில் 55 ஆவரேஜில் 390 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் சூரியகுமார் யாதவை எடுத்ததற்கு பதிலாக இளம் இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மாவை எடுத்திருக்க வேண்டும் என்று, ஆஸ்திரேலியா வீரர் டாம் மூடி வரை கருத்து கூறி வருகிறார். ஏனென்றால் அவர் நல்ல மன உறுதியை காட்டி இருக்கிறார். மேலும் ஆப் ஸ்பின் பந்துவீச்சை பகுதி நேரமாக வீசக்கூடியவர்.

தற்பொழுது சூரியகுமார் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்
“சூரியகுமார் இருக்கிறார் என்று ராகுல் டிராவிட் ஏற்கனவே கூறிவிட்டார். இன்னிங்ஸில் நடுப்பகுதியில் பவுண்டரிகள் அவ்வளவு எளிதில் வராது. அதே சமயத்தில் மூன்று நான்கு விக்கட்டுகள் போகும்போது பவுண்டரியை எப்படி கண்டுபிடிப்பது? பந்து பழையதாக மாறுவதால் பவுண்டரி அடிப்பது பிரச்சினையாக மாறுகிறதா?

- Advertisement -

டி20 கிரிக்கெட் எடுத்துக் கொண்டால் இன்னிங்ஸ் முழுமைக்கும் பந்து கெட்டியாக இருக்கும். அதே ஒருநாள் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் கடைசி ஐந்து ஓவர்களில் பந்து மிக மென்மையாக மாறிவிடும். எனவே பந்து இப்படி மாறுவதால் பவுண்டரி அடிப்பது மிகவும் கடினமானது.

இரண்டாவது விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு பேட்ஸ்மேனும் எப்படி ரன்கள் அடிப்பது என்கின்ற ஃபார்முலாவை கண்டுபிடிக்க வேண்டும். மேலும் சூரிய குமார் யாதவ் ஒரு பல்துறை வீரர். நிச்சயமாக அவருக்கு எந்த இலக்கை வைத்து எந்த பகுதியில் பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என்று தெரியும்.

ஆனால் அவர் செய்ய வேண்டிய ஒன்று இருக்கிறது. அது 25 முதல் 40 ஓவருக்குள் எப்படி ரன்கள் கொண்டு வருவது என்று அவர் கண்டுபிடிக்க வேண்டும். இந்த ஓவர்களில் எப்படி ரன்கள் கொண்டு வருவது என்பது குறித்து அவரது இதயத்திலும் தலையிலும் எந்த தெளிவான சிந்தனையும் இல்லை என்பதாக நான் உணர்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!