பாலோ ஆனை தவிர்க்க இன்னும் எத்தனை ரன்கள் தேவை.. போராடும் இந்தியா

0
2909

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாலின் கையே ஓங்கி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலியா வெற்றியின் அருகில் வந்துவிட்டது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸில் களமிறங்க ஆஸ்திரேலியா அணி 469 ரன்களை குவித்துள்ளது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா 15 ரன்களிலும், கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான புஜாரா மற்றும் கோலி தலா 14 ரன்களில் வெளியேற இந்திய அணி 71 ரன்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனை எடுத்து சிஎஸ்கே வீரர்களான ரஹானே மற்றும் ஜடேஜா ஆகியோர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிய ஜடேஜா 48 ரன்கள் வெளியேற களத்தில் தற்போது ரஹானே 29 ரன்கள் உடன் இருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு துணையாக கேஸ் பரத் ஐந்து ரன்கள் அடித்திருக்கிறார். தற்போது ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை விட இந்தியா 318 ரன்கள் பின் தங்கியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்திய அணியில் ஷார்துல் தாக்கூர் மட்டும்தான் பேட்டிங்கில் பாக்கியிருக்கிறார்.

இதனால் மேலும் 318 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது மிகவும் சவாலான விஷயம். இதனால் இந்திய அணியின் தற்போதைய குறைந்தபட்ச இலக்காக பாலோ ஆணை தவிர்ப்பதில் இருக்க வேண்டும். அதனை இந்தியா செய்து விட்டால் ஆட்டம் டிரா ஆக கூட வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு இந்தியா மேலும் 118 ரன்கள் அடிக்க வேண்டும். ரஹானே மற்றும் கே எஸ் பரத் ஜோடி ஃபாலோ ஆனை தவிர்த்து முடிந்தவரை ஆஸ்திரேலியாவின் இலக்கு அருகில் போக வேண்டும். ஆனால் இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஏன் என்றால் ஆஸ்திரேலிய வீரர்கள் திறம்பட செயல்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக அந்த அணியின் போலந்து இந்திய அணியின் வலது கை பேட்ஸ்மேன்களை  வேட்டையாடி வருகிறார். ஏதேனும் அதிசயம் நிகழாத வரை இந்திய அணி இந்த ஆட்டத்தில் டிரா கூட செய்ய முடியாது.இரண்டு நாட்கள் தான் போட்டி முடிவடைந்து இருக்கிறது.

எஞ்சிய மூன்று நாட்கள் இருக்கிறது. ஆனால் நிலைமையை பார்த்தால் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி இருக்கிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் ரசிகர்கள் அதிசயத்தை எதிர்நோக்கி காத்திருப்பது நலம். நம்பிக்கை அதுதானே எல்லாம்.