“ஹர்திக் பாண்டியா காயம் எப்படி இருக்கு? அவர் இனி உலக கோப்பையில் விளையாடுவாரா?” – ரோகித் சர்மா வெளியிட்ட மிக முக்கியமான தகவல்!

0
2992
Hardik

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பங்களாதேஷ் அணியுடன் ஆட்டம் மிகச்சிறப்பான முறையில் முடிவுக்கு வந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திரும்ப வந்த இளம் வீரர் சுப்மன் கில், உலகக் கோப்பையில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

மேலும் இந்தப் போட்டியில் விராட் கோலி தன்னுடைய முதல் சதத்தை நடப்பு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பதிவு செய்தார். இது அவருக்கு 48வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதமாகவும் அமைந்தது.

இன்னும் இரண்டு சதங்கள் அவர் இதே உலகக் கோப்பை தொடரில் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விராட் கோலி அதிக சதம் அடித்திருந்த சச்சினின் சாதனையை முறியடிப்பார்.

இப்படி இந்திய அணிக்கு மிக நல்ல முறையில் முடிந்த இந்த போட்டியில், இந்திய ரசிகர்கள் யாருமே எதிர்பாராத விதமாக, மோசமான முறையில் பந்து வீசியின் போது முட்டியில் காயம் அடைந்து, இந்திய அணியின் துணை கேப்டன் ஹரிதிக் பாண்டியா வெளியேறினார்.

- Advertisement -

மேற்கொண்டு அவர் இந்த போட்டிக்கு எந்த வகையிலும் மைதானத்திற்கு உள்ளே வரவில்லை. அவருக்கு உடனே ஸ்கேன் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்தது.

இந்திய அணியை பொறுத்தவரையில் ஒவ்வொரு வீரருக்கும் மாற்று வீரர் அணியில் உண்டு. ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு அப்படி ஒரு மாற்று வீரர் என்று யாருமே கிடையாது. அந்த அளவிற்கு அவர் மிக முக்கியமான வீரராக அணியில் இருக்கிறார். எனவே அவர் காயமடைந்து இருப்பது தற்பொழுது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது.

இதுகுறித்து வெற்றிக்குப் பின் பேசும் பொழுது கூறிய கேப்டன் ரோஹித் சர்மா “ஹர்திக் பாண்டியாவுக்கு சிறிது வலி இருக்கிறது. ஆனால் கவலைப்படும்படி மோசமான அளவில் எதுவும் கிடையாது. அது நமக்கு நல்ல விஷயம். ஆனால் இது போன்ற ஒரு காயத்திற்கு நாம் ஒவ்வொரு நாளும் மதிப்பீடு செய்ய வேண்டும். அவருடைய காயத்திற்கு என்ன தேவையோ நாங்கள் அதை செய்வோம்!” என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் ஹர்திக் பாண்டியா பயப்படும் அளவில் உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேற மாட்டார் என்பதும், அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்த போட்டியில் விளையாடவில்லை என்றாலும் கூட, ஒரு வார இடைவெளியில் அதற்கடுத்து நடைபெற இருக்கும் போட்டிக்கு வந்து விடுவார் என்பதாகத் தெரிகிறது.