இஷான் கிஷானால் வைடு நோ-பாலாக மாறியது எப்படி?.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

0
7673
Ashwin

நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபாரமான முறையில் இறுதி பந்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டிகள் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ருத்ராஜ் உடைய தரமான பேட்டிங் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்கள் அடித்து அசத்தியது. ருத்ராஜ் மிகச் சிறப்பாக விளையாடி 57 பந்தில் 123 ரன்கள் குவித்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வீரர் அடித்து அதிகபட்ச ரன் இதுதான்.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு கடைசி ஐந்து ஓவர்களில் 78 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, அந்த அணியின் ஐந்து முக்கியமாக விக்கெட்டுகள் விழுந்திருந்தது. மேற்கொண்டு ஒரு விக்கெட் எடுத்தால் கூட வெற்றி என்கின்ற நிலையில்தான் இந்திய அணி இருந்தது.

இந்த நிலையில் மூன்று ஓவர்களுக்கு 35 ரன்கள் கொடுக்கப்பட்டது. இதற்கு அடுத்து கடைசி இரண்டு ஓவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் 19ஆவது ஓவரை வீசிய அக்சர் படேல் மேத்யூ வேட்டுக்கு முதல் மூன்று பந்துகளில் 10 ரன்கள் கொடுத்தார். இதற்கு அடுத்த பந்து கொஞ்சம் வெளியில் செல்ல நடுவர் வைடு கொடுத்தார். இதை இஷான் கிஷான் ஸ்டெம்பிங் செய்து ரிவ்யூ கேட்க, முடிவில் அந்த வைட் பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. அந்தப் பந்தில் மேத்யூ வேட் சிக்ஸர் அடித்தார். மேலும் அந்த ஓவரின் கடைசி பந்தை இஷான் கிஷான் பிடிக்காமல் விட நான்கு ரன்கள் வந்தது.

- Advertisement -

இந்த இடத்தில் வைடு கொடுக்கப்பட்ட பந்து ஏன் நோபால் கொடுக்கப்பட்டது என்றால், பந்து வீசப்பட்டு வந்துகொண்டிருக்கும் பொழுது, விக்கெட் கீப்பர் உடல் முழுமையாக ஸ்டெம்புக்கு பின்னால் இருக்க வேண்டும். அவருடைய கைகள் ஸ்டெம்பை தாண்டி வந்து முன்கூட்டியே பந்தை பிடிக்கக்கூடாது.

கிரிக்கெட் விதிகள் இப்படி இருக்கின்ற காரணத்தினால், நேற்று ரிவ்யூவில் பொறுமையாக பார்த்த பொழுது இஷான் கிஷான் கைகளை ஸ்டெம்புக்கு வெளியில் நீட்டி பந்தை பிடித்தது தெரியவந்தது. இதன் காரணமாக அம்பயர் வைடு பந்தை நோபால் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!