“நேர்மையா சொல்றன்.. விராட் கோலி இத மட்டும் செய்ய வேணாம்” – இந்திய முன்னாள் வீரர் வேண்டுகோள்

0
123
Virat

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களினால் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி விளையாடவில்லை.

2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் ஆக விராட் கோலி இருந்தார். ஆனால் மூத்த வீரர்களை ஒதுக்கி இளம் வீரர்கள் கொண்ட டி20 அணியை உருவாக்குவதற்காக, சிறப்பாக விளையாடிய விராட் கோலியும் இந்திய டி20 அணியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் வருகின்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் விளையாட வைக்க முடிவு செய்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறது.

இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் களம் இறங்கிய விராட் கோலி அதிரடியான முறையில் ஆட்டத்தை அணுகினார். 16 பந்துகளை சந்தித்த அவர் ஐந்து பவுண்டரிகள் எடுத்து 29 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அவரது ஆக்ரோஷமான பேட்டிங் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” கடந்த டி20 உலகக் கோப்பைக்கும் முன்பாக அவர் இப்படி செய்தார் என்பது ஞாபகம் இருக்கிறது. அவர் அடித்து விளையாட நினைத்தார். அவரால் அப்படி நிச்சயம் செய்ய முடியும். அவர் அப்படி முடிவு செய்தால் அவரால் இன்டெண்ட் காட்டி விளையாட முடியும். இதில் எந்த சந்தேகமும் கிடையாது.

- Advertisement -

ஆனால் நீங்கள் விராட் கோலியின் எந்த ரோல் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு பந்தையும் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் அடிக்க செல்வது இந்திய அணிக்கு சரி வராது. நான் மிக நேர்மையாகவே இதைச் சொல்கிறேன்.

டி20 உலக கோப்பை நடக்கும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களை பார்க்கும் பொழுது 150 முதல் 160 ஆடுகளங்களாக இருக்கின்றன. 200 முதல் 220 ரன்கள் அடிக்கும் ஆடுகளங்கள் அங்கு கிடையாது.

எனவே விராட் கோலி எப்பொழுதும் போல ஆங்கர் ரோல் செய்ய வேண்டும். அவர் ஒரு முனையில் நின்று இன்னிங்ஸை கட்டுப்படுத்தி விளையாட வேண்டும். இது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு சுதந்திரத்தை கொடுக்கும். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் என்ன செய்வாரோ அதையே தற்பொழுது டி20 கிரிக்கெட்டிலும் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்!