“நேர்மையா சொல்றேன் டீம்ல இது இருக்கு.. டி20 வேர்ல்ட் கப் பற்றி யோசிக்க முடியாது” – அக்சர் பேச்சு!

0
68
Axar

இந்த வருடம் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரு நாடுகளில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் சுழற்சி முக்கிய ஆயுதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டுமல்லாமல் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் மீதும் கிரிக்கெட் நிர்வாகங்கள் பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகின்றன.

- Advertisement -

இந்த வகையில் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.

ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் முடிந்து நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அக்சர் படேல் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அடுத்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் நீக்கப்பட்டார்.

அவருடைய இடத்தில் ரவீந்திர ஜடேஜா கொண்டுவரப்பட்டதோடு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ரவீந்திர ஜடேஜாவில் முதன்மையாக பார்க்கிறது என்று புரிந்து கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அக்சர் படேல் வந்திருக்கிறார். ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டிருக்கிறார். மேலும் நேற்றையும் போட்டியின் சிறப்பாக பந்து வீசி 23 ரன் மட்டும் விட்டு தந்து இரண்டு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டி முடிவுக்குப் பின் பேசிய அக்சர் படேல் “அணியில் போட்டி இருக்கிறது ஆனால் நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நீங்கள் உங்கள் செயல்பாட்டில் கவனம் செலுத்துவது அவசியம். இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர் என அடுத்தடுத்து இருப்பதால், தற்போது டி20 உலகக் கோப்பையை பற்றி சிந்திக்க முடியாது.அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

இந்த ஆடுகளத்தில் எந்த உதவியும் இல்லை. குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. நான் என்னுடைய பலத்தில் பந்து வீசி, பேட்ஸ்மேன்கள் என்னை பின் தொடரும் வரை காத்திருப்பதை நோக்கமாகக் கொண்டேன். டைட்டான லென்த்தில் வீச முடிவு செய்தேன். பேட்டர்கள் வாய்ப்பெடுத்து அடிக்க நினைத்ததால் விக்கெட் கிடைத்தது. ஒரு பந்துவீச்சாளராக இந்த ஆடுகளத்தில் நீங்கள் பெரிதாக எதையும் செய்ய முடியாது” என்று கூறி இருக்கிறார்!