திரும்பும் வரலாறு.. 22 வருடங்கள் கழித்து ஜிம்பாப்வே அணிக்கு கிடைக்கப் போகும் அங்கீகாரம்.. சந்தோஷத்தில் கிரிக்கெட் உலகம்.!

0
3725

உலக கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே அணியின் பங்கு முக்கியமானது. ஆப்பிரிக்க தேசமான ஜிம்பாப்வே சர்வதேச கிரிக்கெட்டில் படம் வாய்ந்த அணியாக விளங்கி வந்தது . அந்த நாட்டில் நிலவிய பொருளாதார சிக்கல் மற்றும் அரசியல் காரணங்களால் கிரிக்கெட்டின் வளர்ச்சி மெதுவாக சரிய தொடங்கியது.

1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சூப்பர் சிக்ஸ் சுற்று வரை தகுதி பெற்ற ஜிம்பாப்வே அணி ஆன்ட்டி ஃபிளவர் கிரான்ட் ஃப்ளவர் அழிஸ்டர் கேம்பல் ஹென்றி ஒலங்கா டக்ளஸ் ஹோண்டா போன்ற சிறந்த வீரர்களை கிரிக்கெட் உலகத்திற்கு வழங்கியது. ஒரு காலத்தில் கத்துக்குட்டி அணியாக விளங்கிய ஜிம்பாவே 90 களின் இறுதியில் கிரிக்கெட்டின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தது .

- Advertisement -

தற்போதும் அந்த அணி மிகச் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது . சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை காண தகுதி சுற்று போட்டிகளில் துரதிஷ்டவசமாக தோல்வியடைந்து 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு உற்சாக வழங்கும் ஒரு செயலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்திருக்கிறது. அந்த செயலின் காரணமாக 22 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது ஜிம்பாவே அணி. இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஜிம்பாப்வே . அந்தத் தொடரில் தான் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வேத பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிமுக வீரராக களம் கண்டார்.

இன்று உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக 700 டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது இதன் படி 2025 ஆம் வருடம் மே மாதம் 28ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை நடைபெறும் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி இங்கிலாந்து எதிர்த்து இங்கிலாந்து நாட்டில் வைத்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்ட் தலைவரான ரிச்சர்ட் கோல்ட் ” ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிம்பாப்வே அணி பல உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களையும் பயிற்சியாளர்களையும் உருவாக்கி கிரிக்கெட்டிற்கு பெரும் பங்காற்றி இருக்கிறது. நாங்கள் ஜிம்பாப்வே அணியுடனான கிரிக்கெட் உறவை மேம்படுத்த பல திட்டங்களை வகுத்திருக்கிறோம் அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அணியுடன் நடைபெற இருக்கும் இந்த டெஸ்ட் போட்டியானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசஸ் டெஸ்ட் தொடர் பெஸ்ட் கிரிக்கெட்டின் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அதிகமான நாடுகளையும் பெஸ்ட் டெஸ்ட் போட்டிகளில் ஈடுபடுத்தும் வண்ணம்” இந்தப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

இந்தப் போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு தலைவரான கிவ் மோர் மக்கோனி ” இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடன் ஆன கிரிக்கெட் உறவுகளை மீண்டும் புதுப்பித்ததற்கு இங்கிலாந்துக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். எங்களுக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இருக்கும் உண்டான பந்தம் 1890 களில் ஆரம்பித்தது. இங்கிலாந்தை போன்ற ஒரு மிகப்பெரிய அணியுடன் மீண்டும் டெஸ்ட் போட்டிகளை விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் புத்துணர்வாகவும் இருக்கிறது. ஜிம்பாப்வே கிரிக்கெட் வரலாற்றில் மே 2025 ஆம் வருடம் ஒரு மிகப்பெரிய வரலாற்று சம்பவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.