இரு நாட்டு பிரதமர்கள் பங்கேற்பு.. டாசிலேயே இந்தியாவுக்கு பின்னடைவு.. என்ன செய்ய போகிறார் ரோகித்?

0
101

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் இன்று அகமதாபாத்தில் தொடங்கியது. இந்த போட்டியை வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு இந்தியாவால் செல்ல முடியும். இதே போல் தொடரை சமன் செய்யும் உத்வேகத்துடன் ஆஸ்திரேலிய அணியும் இன்று களமிறங்கியுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியை காண இரு நாட்டு பிரதமர்களுமான மோடியும், ஆஸ்திரேலிய ஆண்டனியும் பங்கேற்றனர். போட்டி தொடங்குவதற்கு முன், இரு நாட்டு வீரர்களின் கைகளை குலுக்கி விழ்த்து தெரிவித்தனர். மேலும் கேப்டன்களுக்கான தொப்பியை பிரதமர்கள்வழங்கினர்.

இந்த டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ் வென்ற ஸ்மிம், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாறியது. இது குறித்து பேசிய ஸ்மித், பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தாங்களும் பேட்டிங் செய்ய இருந்தோம். தற்போது என்ன செய்ய வேண்டுமோ, அதனை சிறப்பாக செய்ய வேண்டி இருப்பதாக கூறினார். முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டு ஷமி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆஸ்திரேலிய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

- Advertisement -

தற்போது டாசை இழந்ததால் இந்திய அணி கடைசி இன்னிங்சில் விளையாட வேண்டிய நெருக்கடியில உள்ளது. இதனால் குறைந்த ரன்களில் ஆஸ்திரேலியா சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணியே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.