ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அணிகளின் ஒரு ஆட்டத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்த ரன்கள்

0
9360
Highest and Lowest ODI Scores

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளைப் போலவே ஒருநாள் போட்டிகளுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. ஒருநாள் போட்டிகள் ஆரம்ப கால கட்டத்திலிருந்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. ஒருநாள் போட்டிகள் ஆரம்ப காலகட்டத்தில் நடக்கும் பொழுது ஒவ்வொரு அணிகளும் சராசரியாக ஒவ்வொரு அணிகளும் 200 முதல் 250 ரன்கள் அடித்து வந்தது.

ஆனால் அதன் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு அணிகளும் 300, 350, 400 என்று தற்போது ஒவ்வொரு அணிகளும் சர்வசாதாரணமாக அதிக ரன்கள் குவித்து வருகின்றன. குறிப்பாக உலக கோப்பை தொடரை விரும்பாத கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒருநாள் போட்டிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பதுதான் உண்மை.

- Advertisement -

அப்படிப்பட்ட ஒரு நாள் போட்டிகளில் சர்வதேச அணிகள் அதிக ரன்கள் அடித்த ஆட்டத்தையும் அதே சமயம் மிக குறைந்த ரன்கள் அடித்த ஆட்டத்தையும் தற்போது இந்த கட்டுரையில் பார்ப்போம்.

1. ஆஸ்திரேலியா

அதிகபட்சம் – தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 434/4 (2006)

2006ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியில் மோதிக்கொண்டன அதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது. ரிக்கி பாண்டிங் ஆடிய ருத்ர தாண்டவத்தால் ஆஸ்திரேலிய அணி 434 ரன்கள் குவித்தது. அந்த போட்டியில் ரிக்கி பாண்டிங் 164 ரன்கள் எடுத்திருந்தார், ஒருநாள் போட்டிகளில் அதுவே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

- Advertisement -

ஆனால் அதன் பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நிச்சயமாக தோல்வி பெற்றுவிடும் என்று நினைத்த வேளையில், மிக நிதானமாக இறுதிவரை விளையாடி ஆஸ்திரேலிய அணி அமைத்திருந்த இமாலய இலக்கை வெற்றிகரமாக எட்டியது. தென்னாபிரிக்க அணியில் மிக சிறப்பாக விளையாடிய கிப்ஸ் 175 ரன்கள் அடித்திருந்தார். அவர் அடித்த அடியை ஆஸ்திரேலிய அணி ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

குறைந்தபட்சம் நியூசிலாந்து அணிக்கு எதிராக 70/10 (1986) மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 70/10 (1977)

அதேசமயம் 1977 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராக மிகக் குறைவான ரன்கள் குவித்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 170 ரன்கள் குவித்து இருந்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி 70 ரன்கள் எடுத்த நிலையில் தங்களது ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

அதேபோல ஆயிரத்து தொள்ளாயிரத்து 86 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 276 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

2. இங்கிலாந்து

அதிகபட்சம் – ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 481/6 (2018)

2018 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாட தொடங்கியது. ஜேசன் ராய் அரைசதம் அடிக்க ஜானி பேர்ஸ்டோ மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் சதம் அடிக்க இறுதியில் கேப்டன் இயான் மோர்கன் அரைசதம் குவிக்க இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 481 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.

குறைந்தபட்சம் – ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 86/10 (2001)

2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் விளையாடியது. இது விளையாடிய ஆஸ்திரேலிய அணி 208 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நினைத்த வேளையில், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் குறிப்பாக மெக்ராத், வார்னே மற்றும் கில்லஸ்பி மிக சிறப்பாக பந்து வீச இறுதியில் இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டது குறிப்பிடதக்கது.

3. இந்தியா

அதிகபட்சம் – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 418/5 ( 2011 )

2011 ஆம் ஆண்டு இந்திய அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதியது. அந்தப் போட்டியில் விரேந்திர சேவாக் மிக அற்புதமாக விளையாடி 200 ரன்களுக்கு மேல் குவித்தார். 25 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் என அதிரடியாக விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணி அச்சுறுத்தினார். அதன் காரணமாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி 418 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 265 ரன்களுக்கு தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்சம் – இலங்கை அணிக்கு எதிராக 54/10 ( 2000 )

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக மிகக் குறைந்த ரன்கள் எடுத்துள்ளது. 2000 ஆம் ஆண்டு கொக்ககோலா சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 299 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அதிர்ச்சி அளித்தது. இலங்கை அணியில் மிக சிறப்பாக பந்து வீசிய சமிந்தா வாஸ் மற்றும் முத்தையா முரளிதரன் ஜோடி, அந்தப் போட்டியின் இறுதியில் இந்திய அணியை 245 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற வைத்தனர்.

4. நியூசிலாந்து

அதிகபட்சம் – அயர்லாந்து அணிக்கு எதிராக 402/2 ( 2008 )

நியூசிலாந்து அணி 2008ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டியில் பிரண்டன் மெக்கல்லும் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் மிக அற்புதமாக விளையாடினார்கள். பிரண்டன் மெக்கல்லம் 166 ரன்களும்,ஜேம்ஸ் மார்ஷல் 161 ரன்கள் எடுத்திருந்தனர்.

அதன் காரணமாக 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 402 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தங்களது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இறுதியில் நியூசிலாந்து அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்சம் – பாகிஸ்தான் அணிக்கு எதிராக 64/10 ( 1986 )

1986ஆம் ஆண்டு ஆஸ்திரல் – ஆசிய கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியில் விளையாடிய இம்ரான்கான் வாசிம் அக்ரம் மற்றும் அப்துல்காதிர் மூவரும் இணைந்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

அதன் காரணமாகவே வெகு சீக்கிரமாக நியூஸிலாந்து அணி தங்களது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 64 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

5. இலங்கை

அதிகபட்சம் – நெதர்லாந்து அணிக்கு எதிராக 443/9 ( 2006 )

2006 ஆம் ஆண்டு இலங்கை அணி அந்த அணிக்கு எதிரான ஒரு போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய ஜெயசூரியா மற்றும் தில்சன் இருவரும் சதம் அடித்தனர்.அதன் காரணமாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணி அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்த இறுதியில் இலங்கை அணி 192 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

குறைந்தபட்சம் – தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 43/10 ( 2012 )

2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடியது அந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 306 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய இலங்கை அணி தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சாளர்களின் வேகத்தை தாங்கமுடியாமல் தங்களது அனைத்து விக்கெட்டுக்களையும் 20 ஓவர்களில் பறிகொடுத்து வெறும் 43 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 258 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

6. பாகிஸ்தான்

அதிகபட்சம் – ஜிம்பாவே அணிக்கு எதிராக 399/1 ( 2018 )

2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் மிக அற்புதமாக விளையாடிய ஃபக்கார் ஜமான் தனது இரட்டை சதத்தை குவித்தார்.மேலும் இமாம் உல் ஹக் உடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தனர். அதன் காரணமாக 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 399 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் விளையாடிய ஜிம்பாப்வே அணி மிக சீக்கிரமாக தங்களது அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க இறுதியில் பாகிஸ்தான் அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்சம் – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 43/10 ( 1993 )

1993 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய ஒரு ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி அதனுடைய குறைந்த ரன்களை குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியில் பேட்டர்சன், கோர்ட்னி வால்ஷ் மற்றும் ஆண்டர்சன் கம்மின்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு தாங்கமுடியாமல் தங்களது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 43 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதன் பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 13 வது ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

7. தென் ஆப்ரிக்கா

அதிகபட்சம் – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 439/2 ( 2015 )

2015 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் ஹசிம் ஆம்லா, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ராஸ்சோவ் மிக அற்புதமாக விளையாடினார்கள். குறிப்பாக ஏபி டி வில்லியர்ஸ் 44 பந்துகளில் 149 ரன்கள் குவித்து மேற்கிந்திய தீவுகள் அணியை அச்சுறுத்தினார். அந்த போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச அளவில் ஒருநாள் சதத்தை மிக வேகமாக அடித்து புதிய சாதனையையும் படைத்தார்.

இதன் காரணமாக தென் ஆபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 439 ரன்கள் குவித்தது. இறுதியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை 148 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்சம் – ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 69/10 ( 1993 )

1993ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தென்னாபிரிக்க அணி விளையாடியது முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து தங்களுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்து 69 ரன்களில் தங்களது ஆட்டத்தை முடித்துக் கொண்டனர். ஆஸ்திரேலிய அணியில் பவுல் ரெய்ஃபெல் மிக அற்புதமாக பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

8. மேற்கு இந்திய தீவுகள்

அதிகபட்சம் – இங்கிலாந்து அணிக்கு எதிராக 389/9 ( 2019 )

2019ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 418 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்தில் மிக சிறப்பாக விளையாடினாலும் இறுதியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் 11 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் விளாசி மிக சிறப்பாக 162 ரன்கள் குவித்தார்.அதன் காரணமாகவே மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 389 ரன்கள் குவிக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்சம் – தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 54/10 ( 2004 )

2004 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்டன அந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 263 ரன்கள் குவித்தது அந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய ஜாக்ஸ் காலிஸ் சதம் அடித்தார்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய இலங்கை அணி மக்காய நிட்டினி மற்றும் லான்ஸ் குளூஸ்னர் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இறுதியில் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் காரணமாக இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.