120 ஆண்டு சாதனையை முறியடிக்குமா இந்தியா.. லண்டன் ஓவல் டெஸ்டில் இதுவரை சேஸ் செய்யப்பட்ட அதிக ஸ்கோர்?

0
5023

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் விளையாடுகிறது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. 173 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இதில் ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை இந்திய அணியை விட ஆஸ்திரேலியா அணி 419 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஓவல் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் 120 ஆண்டுகால சாதனையை முறியடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கூரே 276 ரன்கள் தான்.

அதுவும் இது 1902 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டி என்பது நிகழ்த்தப்பட்டது. இந்த 120 ஆண்டு காலத்தில 250 ரன்கள் ஒரே ஒரு முறை தான் இலக்கு வெற்றிகரமாக துரத்தப்பட்டிருக்கிறது. அதுவும் 1963 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் வெஸ்ட் இண்டீஸ் க்கும் நடத்தப்பட்ட டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 253 ரன்கள் என்று இலக்கை துரத்தி இருக்கிறது.

- Advertisement -

இதேபோன்று இந்தியாவும் ஓவல் மைதானத்தில் நான்காவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக 173 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வெற்றி பெற்றிருக்கிறது. எனவே வரலாறு அனைத்தும் இந்தியாவுக்கு எதிராகவே இருக்கிறது. இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா டெஸ்ட் போட்டி ஒன்றில் 438 ரன்கள் என்ற அதிகபட்ச இலக்கை துரத்தியது.

அப்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் கவாஸ்கர் இரட்டை சதம் விளாசி அசத்தியிருக்கிறார். அப்போது முதல் விக்கெட்டுக்கு 213 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்டது. எனினும் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 423 ரன்கள் எடுத்த நிலையில் எட்டு விக்கெட்டுகளை இழந்து அந்த போட்டியில் டிராவை பெற்றது.

இதேபோன்று 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நான்காவது இன்னிங்ஸில் 464 ரன்கள் என்ற இலக்கை துரத்தியபோது 345 ரன்கள் வரை அடித்து தோல்வியை தழுவியது.