2022 ஐபிஎல் தொடரில் வர்னையாளர்களாக பங்கேற்பவர்களின் பட்டியல் வெளியீடு

0
130
IPL Commentators 2022

உலகின் நம்பர் 1 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரான ஐ.பி.எல்-ன் 15-வது சீசன் வருகிற 26-ஆம் தேதி கோலாகலமாக மும்பையில் தொடங்குகிறது.

இதில் முதல் ஆட்டத்தில் 2021-ஆம் ஆண்டு 14-வது ஐ.பி.எல் சீசனின் இறுதிப்போட்டியில் சந்தித்த, நடப்பு சாம்பியன் சென்னையும், இரண்டாமிடம் பிடித்த கொல்கத்தாவும் மோதுகின்றன.

- Advertisement -

2018-2022 வரையிலான ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமையை இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 16,347 க்கு வாங்கியிருந்தது.

ஆங்கிலம், ஹிந்தி தவிர மற்ற பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு அலைவரிசை சேவையை வழங்கி வருகிறது.

தற்போது ஐ.பி.எல்-ன் 15-வது சீசனுக்கான தன் வர்ணனையாளர் குழுவை மொழிவாரியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இதில் சமீபத்தில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஓய்வுப்பெற்ற இரவி சாஸ்திரி மீண்டும் வர்ணைனையாளராகக் களமிறங்குகிறார்.

மேலும் நடந்து ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எந்த அணிகளும் குறிப்பாய் சென்னை அணியும் வாங்காததால் சர்ச்சையான சுரேஷ் ரெய்னா வர்ணனையாளர் என்ற புதிய பரிணாமத்தை எடுக்கிறார்.

- Advertisement -

மொழிவாரியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள வர்ணனையாளர் குழுவின் விபரங்கள் பின்வருமாறு;

உலகம் முழுமைக்கான ஆங்கில வர்ணனையாளர் குழு.

ஹர்சா போக்லோ – சுனில் கவாஸ்கர்
லட்சுமண் சிவராம கிருஷ்ணன்- அஞ்சும் சோப்ரா
முரளி கார்த்திக் – தீப்தாஸ் குப்தா
மேத்யூ ஹைடன்- ஆலன் வில்கின்ஸ்
பொமி மபாங்க்வே- ஐயன் பிஷப்
நிக் நைட்- டேனி மோரீசன்
கெவின் பீட்டர்சன் – சைமன் டால்

ஹிந்தி

ஆகாஷ் சோப்ரா – பார்த்திவ் படேல்
இர்பான் பதான் – ஜாட்டின் சப்ரு
கவுதம் கம்பீர் – நிகில் சோப்ரா
ரவிசாஸ்திரி- தன்யா ப்ரோகித்
சுரேஷ் ரெய்னா- கிரண் மோர்
சுரேன் சுந்தரம்

தமிழ்

முத்துராமன். ஆர் – ஆர்.கே
பாவனா- கே. ஸ்ரீகாந்த்
ஆர்.ஜே பாலாஜி- நானி
பத்ரிநாத்- சடகோபன் ரமேஷ்
அபினவ் முகுந்த்

கன்னடம்

மது மயிலன்கோடி – வினய்குமார்
கிரண் ஸ்ரீனிவாஸ் – ஸ்ரீனிவாச மூர்த்தி
சுமேஷ் கோனி – விஜய் பரத்வாஜ்
பரத் சிப்லி – வெங்கடேஷ் பிரசாத்
வேதா கிருஷ்ணமூர்த்தி- அனில்குமார்

மராத்தி

குணால் தத் – சைதன்யா சன்ட்
பிரசன்னா சன்ட் – சினேகல் பிரதான்
சந்தீப் படேல்

பெங்காலி

சஞ்சீவ் முகர்ஜி- தெபாஷிஸ் தத்தா
சாய்தீப் முகர்ஜி – கெளதம் பட்டாச்சார்யா
சராதிந்து முகர்ஜி

தெலுங்கு

கிருஷ்ணா – வேணுகோபால்
என். மாட்ச்சா – வி.வி மேதாபட்டி
எம்.எஸ்.கே பிரசாத் – எஸ். அவுலா பள்ளி
கல்யாண் கிருஷ்ணா- எ. ரெட்டி
கே.என் சக்ரவர்த்தி –

மலையாளம்

விஷ்ணு ஹரிகரன் – சி.எம் தீபக்
டீனு யோகனன்- ராய்பி கோம்ஸ்
சியாத் மொகமத்