இந்திய கிரிக்கெட்

சூரியகுமார் புதிய கேப்டன்.. ஹர்திக் பாண்டியாவை ஒதுக்க உண்மை காரணம் என்ன?.. வெளியான தகவல்கள்

சற்றுமுன் இந்திய தேர்வுக்குழு இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு டி20 மற்றும் ஒருநாள் தொடர்கான இரண்டு அணிகளையும் அறிவித்தது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக மிகவும் முக்கிய பங்கை கொண்டு இருந்தார். இதன் காரணமாக ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதை அடுத்து ஹர்திக் பாண்டியா மீண்டும் கேப்டனாக கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் இடம் பெற்றார். இருந்த போதிலும் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டதோடு, துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் இனி ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் எந்த வடிவத்திலும் கேப்டனாக வரமாட்டார் என்பது உறுதியாக தெரிந்து இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர் வெற்றிக்குப் பிறகு அவர் மீண்டும் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த முடிவு ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இதற்கான உண்மை காரணம் வெளிவந்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா எளிதில் காயம் அடையக் கூடியவராக இருப்பதும், இந்திய அணிக்கு மிக முக்கியமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக அவர் ஒருவர் மட்டுமே இருப்பதும், அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்த்தி வைப்பதற்கான முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

இதையும் படிங்க : ருதுராஜ் நீக்கம்.. கில்லுக்கு துணை கேப்டன் பதவி.. புள்ளிவிபரத்தில் மேலே இருந்தும் பரிதாபம்.. ரசிகர்கள் கோபம்

ஹர்திக் பாண்டியாவுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கின்ற காரணத்தினால் கேப்டனாக இருந்தால் எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டியது இருக்கும். எனவே அவரைச் சாதாரண வீரராக அணியில் வைத்து, அவருக்கு ஓய்வு தேவைப்படும் பொழுதெல்லாம் கொடுத்து, அவருடைய பணிச்சுமையை நிர்வகித்து, காயம் ஏற்படுவதில் இருந்து அவரை காப்பாற்றுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஹர்திக் பாண்டியாவுக்கு இது ஏமாற்றமாக அமைந்திருப்பதாகவே தெரிகிறது!

- Advertisement -
Published by