ஒவ்வொரு வருடமும் ஐசிசி தரப்பில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது கொடுப்பது வழக்கம். அதன்படி கடந்த 2021ஆம் ஆண்டிற்கான ஐசிசி விருது பெற்ற வீரர்களை பற்றி தற்பொழுது பார்ப்போம்.
ஆண்களுக்கான சிறந்த ஐசிசி டி20 வீரர்
கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணியில் மிக சிறப்பாக விளையாடிய முஹம்மது ரிஸ்வான்,29 போட்டிகளில் 1326 ரன்கள் குவித்தார். கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் அவருடைய பேட்டிங் சராசரி ஆவெரேஜ் விகிதம் 73.66 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 134.89 ஆக இருந்தது. கடந்த ஆண்டு நடந்த முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த 3வது வீரராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய முஹம்மது ரிஸ்வான் ஆண்களுக்கான சிறந்த ஐசிசி டி20 வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெண்களுக்கான சிறந்த ஐசிசி டி20 வீரர்
பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டாமி பியுமொண்ட் கடந்த ஆண்டின் சிறந்த ஐசிசி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு அவர் மொத்தமாக 9 போட்டிகளில் விளையாடி 303 ரன்கள் குவித்திருக்கிறார்.கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் அவருடைய பேட்டிங் சராசரி ஆவெரேஜ் விகிதம் 33.66 ஆகும்.
ஐசிசி சிறந்த ஆண் அறிமுக வீரர்
கடந்த ஆண்டு விளையாடிய சர்வதேச வீரர்களில் சிறந்த அறிமுக வீரராக தென்னாபிரிக்க அணியை சேர்ந்த ஓபனிங் பேட்ஸ்மேன் ஜென்னிமன் மலான் ஐசிடி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு 17 சர்வதேச போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்கள் உட்பட 715 ரன்களை அவர் குவித்துள்ளார்.கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் அவருடைய பேட்டிங் சராசரி ஆவெரேஜ் விகிதம் 47.66 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 101.85 என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி சிறந்த பெண் அறிமுக வீரர்
கடந்த ஆண்டு பெண்கள் வரிசையில் பாகிஸ்தானை சேர்ந்த பாத்திமா சனா சிறந்த அறிமுக வீரர் விருதை வாங்கினார். கடந்த ஆண்டு அவர் பேட்டிங்கில் 165 ரன்களும் பவுலிங்கில் 24 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி சிறந்த ஆண் இணை கிரிக்கெட் வீரர்
ஐசிடி தரப்பில் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட மற்றொரு விருதான இணை கிரிக்கெட் வீரர் விருதை ஓம்னி சேர்ந்த ஜீசன் மாக்சூடு கைப்பற்றினார். ஆல்ரவுண்டர் வீரரான இவர் கடந்த ஆண்டு பேட்டிங்கில் 316 ரன்களும் பவுலிங்கில் 21 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி சிறந்த பெண் இணை கிரிக்கெட் வீரர்
மேற்கூறிய அதே இணை கிரிக்கெட் வீரர் விருதை பெண்களில் ஆஸ்திரியாவை சேர்ந்த ஆண்டிரியா மே ஜெபாடா கைப்பற்றினார்.கடந்த ஆண்டு 8 டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 2 அரை சதம் உட்பட 361 ரன்கள் அவர் குவித்துள்ளார்.கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் அவருடைய பேட்டிங் சராசரி ஆவெரேஜ் விகிதம் 51.57 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 102.55 என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி சிறந்த ஆண் கிரிக்கெட் வீரருக்கான விருது
பாகிஸ்தானைச் சேர்ந்த சகீன் அஃப்ரிடி கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் 6 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாகிஸ்தான் அணியை அரை இறுதி சுற்றுக்கு செல்ல மிகப் பெரிய பக்கபலமாக இருந்தார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு 9 போட்டிகளில் மொத்தமாக 47 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு இவருடைய பௌலிங் சராசரி விகிதம் 17.06 மட்டுமே ஆகும்.
ஐசிசி சிறந்த பெண் கிரிக்கெட் வீரருக்கான விருது
22 சர்வதேச போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் உட்பட 855 ரன்கள் குவித்து கடந்த ஆண்டு மிக சிறப்பாக விளையாடிய இந்திய பெண் கிரிக்கெட் வீரரான ஸ்மிருதி மந்தனாவிற்கு இந்த விருதை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.
ஐசிசி சிறந்த பெண் ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருது
தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த லிசல்லே லீ 11 ஒருநாள் போட்டியில் விளையாடி 632 ரன்கள் குவித்துள்ளார். அந்த 11 போட்டிகளில் அவர் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இவருடைய பேட்டிங் சராசரி ஆவெரேஜ் விகிதம் 90.28 ஆகும்.
ஐசிசி சிறந்த ஆண் ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருது
பாகிஸ்தான் அணியை சேர்ந்த பாபர் அசாம் கடந்த ஆண்டு 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும், அதில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 405 ரன்கள் கடந்த ஆண்டு குவித்திருக்கிறார். கடந்த ஆண்டு இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் விகிதம் 67.50 என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் கடந்த ஆண்டு 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் உட்பட அதிகபட்சமாக 1708 ரன்கள் குவித்துள்ளார். கடந்த வருடம் அவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 61.00 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 56.85 ஆகும். அதே சமயம் தனது சிறப்பான பந்துவீச்சு மூலமாக 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஜோ ரூட் அசத்தியுள்ளார்.
ஐசிசி சிறந்த நடுவருக்கான விருது
கடந்த ஆண்டு 20 சர்வதேச போட்டிகளில் மிக சிறப்பாக தன்னுடைய தீர்ப்புகளை வழங்கி கிரிக்கெட் நடுவர்கள் மத்தியில் தனியாக தெரிந்த ஒரு நடுவர் மார்க்கஸ் எராஸ்மஸ். குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இவரது முடிவுகள் கன கச்சிதமாக இருந்தது. இவருடைய சிறப்பான நடுவர் பணியை கௌரவிக்கும் வகையில் இவருக்கு கடந்த ஆண்டிற்கான சிறந்த நடுவர் விருதை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.