இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு தற்போது சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாதது ஏன் என்பது குறித்தான கேள்விக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஒரு வரியில் பதில் அளித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 வருடங்களுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக இருந்து பிளே ஆப் சுற்றுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்துச் சென்றிருக்கிறார். மேலும் புள்ளி பட்டியலில் லீக் சுற்றில் முடிவில் அந்த அணி முதல் இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் ஐபிஎல் அசத்தல்கள்
உள்நாட்டு கிரிக்கெட்டில் ரஞ்சி தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. மேலும் அவருடைய தலைமையில் சையத் முஸ்தாக் அலி டி20 தொடரை மும்பை அணி வென்றது. அவருடைய பேட்டிங் தாக்குதல் பாணியில் இருந்தாலும் சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே இருந்தார்.
மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையை வென்றார். இருந்த போதிலும் அந்த அணி அவரை தக்க வைத்துக் கொள்ளாததால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 26 புள்ளி 75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு, தற்போது அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும் ஒரு பேட்ஸ்மேனாக இந்த ஐபிஎல் சீசனில் 500 ரன்கள் தாண்டியும் எடுத்திருக்கிறார்.
கம்பீர் தந்த பதில்
இப்படியான நிலையிலும் மேலும் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றிருப்பதாலும், தற்போதைக்கு இந்திய டெஸ்ட் அணியில் சீனியரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்காதது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களுடைய விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : என் சொந்த டீம் பஞ்சாப்பை தோற்கடிக்க.. ஆர்சிபி இந்த 2 மாற்றத்த செய்யுங்க.. கப் உங்களுக்குதான் – ஹர்பஜன் சிங் அறிவுரை
இந்த நிலையில் இது குறித்து இன்று கம்பீர் இடம் பத்திரிக்கையாளர் ஒருவர் ஏன் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யவில்லை என்று கேட்டதற்கு ” நான் தேர்வுக்குழுவில் செலெக்டராக இல்லை” என்று பதில் அளித்திருக்கிறார். அதாவது தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு பிரச்சனையை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பக்கம் கம்பீர் தள்ளிவிட்டுவிட்டார். ஆனால் சுதந்திரமாக செயல்படும் ஸ்ரேயாஸ் ஐயரை கம்பீருக்கு பிடிக்காது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.






