என் சொந்த டீம் பஞ்சாப்பை தோற்கடிக்க.. ஆர்சிபி இந்த 2 மாற்றத்த செய்யுங்க.. கப் உங்களுக்குதான் – ஹர்பஜன் சிங் அறிவுரை

0
473
Harbhajan

நடப்பு ஐபிஎல் தொடரில் நாளை முதல் பிளே ஆப் சுற்று தொடங்குகிறது. இந்த சுற்றில் ஆர்சிபி அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து சஞ்சய் பாங்கர் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் பேசி இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றின் முதல் தகுதி சுற்றுப்போட்டி நாளை பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.

- Advertisement -

சஞ்சய் பாங்கர் யோசனை

இந்த போட்டி குறித்து சஞ்சய் பாங்கர் பேசும் பொழுது “நீங்கள் லிவிங்ஸ்டனுக்கு பதிலாக துஷாராவை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அணி நம்ப முடியாத அளவுக்கு மாறிவிடும். பின்னர் செப்பர்ட்டை நீக்கிவிட்டு கேசில்வுட், துஷாரா, பில் சால்ட் மற்றும் டிம் டேவிட் என நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருப்பார்கள். உங்களுடைய பந்துவீச்சு வலிமையாக இருக்க வேண்டும் ஏனென்றால் பஞ்சாப் ஆறு முறைக்கு மேல் இந்த சீசனில் 200 ரன்கள் தாண்டி அடித்திருக்கிறது”

“உங்களுடைய பிளேயிங் லெவனில் வெளிநாட்டு வீரராக விளையாடக்கூடிய லிவிங்ஸ்டன் ரன்கள் எடுக்கவில்லை. இதன் காரணமாக நீங்கள் உங்களுடைய பந்துவீச்சை முழுமையாக வலிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் செய்யும் பொழுது சிறந்த ஒரு கலவை உங்களுக்கு கிடைக்கும் எதிரணியை உங்களால் சுலபமாக கட்டுப்படுத்த முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஹர்பஜன் சிங் யோசனை

இது குறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது ” உங்களிடம் புவனேஸ்வர் குமார் இருந்தாலும் கூட ஒரு முக்கிய பந்துவீச்சாளர் அடி வாங்கும் பொழுது நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள். இதன் காரணமாக உங்களுக்கு கூடுதல் பந்துவீச்சாளர் இருக்க வேண்டும். எனவே நீங்கள் அடுத்து துசாரா மற்றும் கேசில்வுட் இருவரையும் அணியில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த அணியின் பேட்டிங் நல்ல முறையில் செயல்படுகிறது. பௌலிங் சிறப்பான முறைக்கு வந்தால் நம்ப முடியாத அளவுக்கு ஆர்சிபி மாறிவிடும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் திக்வேஷ் ரதியை ஏன் அவமானப்படுத்தறீங்க.. பவுலர்னா இளக்காரமா போச்சா? – அஸ்வின் விமர்சனம்

தன்னுடைய சொந்த மாநில அணியான பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடிப்பதற்கு ஹர்பஜன் சிங் ஐடியா கொடுத்திருப்பது சமூக வலைதளங்களில் ஆர்சிபி ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் பஞ்சாப் அணியில் ஆல் ரவுண்டர் யான்சன் நாடு திருப்பகின்ற காரணத்தினால் விளையாட மாட்டார் என்பது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கிறது.

- Advertisement -