“மனசுல பெரிய பவுலர்னு நினைப்பு” – சாம்பியன் இந்திய வீரரை கிண்டலடித்த புவனேஸ்வர் குமார்.!

0
5296

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் இவர் தான். நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்காக மிகத் தீவிரமாக தயாராகி வருகிறார்.

விராட் கோலி கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக ரசிகர்களாலும் சக வீரர்களாலும் கொண்டாடப்படும் ஒருவர். அவரது தன்னம்பிக்கை மற்றும் போராட்ட குணம் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்று. விராட் கோலி தனது பேட்டிங்கில் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்து ஆடுகிறாரோ அதேபோன்று அவரது பந்துவீச்சின் மீதும் அதிக நம்பிக்கை கொண்டவர் என்று சக வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .

- Advertisement -

விராட் கோலி களத்தில் இருக்கும் போது ஆக்ரோசத்துடனும் தன்னம்பிக்கையின் உச்சத்திலும் போட்டிகளை அணுகுவதை நாம் காண முடியும் . அவர் ஒவ்வொரு போட்டியிலும் அதிகபட்ச ஊத்துவிகத்துடனும் அதிகமான போராட்ட குளத்துடனும் ஆடுகளத்தில் செயல்படுவதை நாம் பார்க்கலாம் . இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட மோதலே விராட் கோலியின் போராட்ட குணத்திற்கும் ஆக்ரோசத்திற்கும் மிகச்சிறந்த சான்று .

மேலும் விராட் கோலி கிரிக்கெட் வீரராக வில்லை என்றால் அவர் ஒரு சிறந்த மல்யுத்த வீரராக ஆகி இருப்பார் என அவரது சகவீரர்கள் விளையாட்டாக கூறுவதுண்டு. அந்த அளவிற்கு போராட்ட குணமும் தன்னம்பிக்கையும் மிக்கவர் விராட் கோலி . இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஸ்வர் குமார் விராட் கோலி பற்றி சமீபத்தில் அளித்திருக்கும் ஒரு பேட்டி ஆச்சரியமாகவும் அதே நேரம் நகைச்சுவையாகவும் இருக்கிறது. இந்தப் பேட்டி தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் புவனேஷ் குமார் ” விராட் கோலி தன்னை இந்திய அணியிலேயே சிறந்த பந்துவீச்சாளராக நினைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் விராட் கோலி ஒவ்வொரு முறை பந்து வீசும் போதும் நாங்கள் அனைவரும் மிகவும் அச்சத்தில் இருப்போம். ஏனென்றால் அவரது பந்துவீச்சு ஸ்டைலின் காரணமாக அவருக்கு காயம் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் ” இன்று நகைச்சுவையுடன் பதிலளித்திருக்கிறார் புவனேஸ்வர் குமார்

- Advertisement -

இந்திய அணியின் தலைசிறந்த வீரரான விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டி சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 102 ரன்கள் தேவைப்படுகிறது. இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 13,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் விராட் கோலி. மேலும் ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்து வீரர் என்ற சாதனை படைப்பதற்கு இன்னும் நான்கு சதங்களே எடுக்க வேண்டி இருக்கிறது. அதை வருகின்ற ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைகளில் விராட் கோலி நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மார்டன் லெஜெண்டாக கிரிக்கெட் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வரும் விராட் கோலி சேஸ் மாஸ்டர் என கிரிக்கெட் விமர்சகர்களால் அழைக்கப்படுபவர் மேலும் கிரிக்கெட் உலகமே அவரை கிங் கோலி என கொண்டாடி வருகிறது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வருகின்ற 30ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இந்திய அணியின் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை வெற்றிகளில் விராட் கோலியின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது .