தற்போது தென் ஆப்ரிக்கா அணிக்கு விளையாட இவர் தகுதி இல்லை ; முதலில் இதைச் செய்யட்டும் பிறகு பார்க்கலாம் – பேபி ஏபி பிரீவிஸ் குறித்து கேப்டன் பவுமா அதிரடிப் பேச்சு

0
346
Temba Bavuma about Dewald Brevis

கிரிக்கெட்டில் சச்சினின் காலம் நவீன கிரிக்கெட்டின் துவக்க காலம் என்றால், தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி.டிவிலியர்சின் காலம் அதி நவீன கிரிக்கெட்டிற்கான காலம் என்று கூறலாம். அந்தளவிற்கு 360 டிகிரியில் பாஸ்ட்-பவுலிங்கில் ஸ்வீப் ஷாட் வரை ஆடி, கிரிக்கெட்டை மேலும் நவீனப்படுத்தியவர் ஏ.பி.டிவிலியர்ஸ்.

கடந்த வருடத்தோடு அவர் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெற்றுவிட கிரிக்கெட்டில் அவருக்கான இடம் அப்படியேதான் இருக்கிறது. அவரின் தீ போன்ற, வித்தியாசமான ஷாட்களால் காணக் கிடைத்த அதிரடி ஆட்டத்தைத் தர எந்த வீரரும் இல்லை.

- Advertisement -

இந்தக் குறையைக் கொஞ்சம் போக்கும் விதமாகத்தான், கடந்த ஆண்டு வெஸ்ட் இன்டீசில் நடைபெற்ற அன்டர் 19 உலகக்கோப்பையில், ஏ.பி.டிவிலியர்ஸின் தென்ஆப்பிரிக்காவில் இருந்தே டிவால்ட் பிரிவீஸ் எனும் 19வயது இளம் வீரர் கிடைத்தார். ஏறக்குறைய ஏ.பி.டிவிலியர்ஸ் போலவே விளையாடும் இவரை பேபி ஏபிடி என்றுதான் அழைக்கிறார்கள். இவரின் இன்-சைட் அவுட் சிக்ஸர் 100% ஏபிடியை போலவே இருந்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் 3 அரைசதங்கள், 2 அரைசதங்களோடு 506 ரன்களை குவித்து, தொடர்ச்சியாக சீராக ரன் குவிக்கும் திறமையை வெளிப்படுத்தினார்.

இதனால் இந்த வருட ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலத்தில் பெங்களூர் அணியோடு போட்டியிட்டு மும்பை அணி இவரை மூன்று கோடிக்கு வாங்கியது. மொத்தம் ஏழு ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு பெற்ற இவர் 23 ரன் சராசரியில் 161 ரன்களை அடித்தார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 49 ரன்கள். இதில் 11 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள் அடக்கம்.

இதனால் சமூக வலைத்தளங்களில் இவருக்கு தென்ஆப்பிரிக்க தேசிய அணியில் வாய்ப்பு தரவேண்டுமென்ற பேச்சுக்களும் பரவியது. இதுக்குறித்து தென்ஆப்பிரிக்காவின் வொய்ட்-பால் கிரிக்கெட் கேப்டன் டெம்பா பவுமாவிடம் கேட்ட பொழுது, அதற்கு அவர் “பிரீவிஸ் அற்புதமாதமான திறமை இருக்கும் வீரர். அவருக்கு நல்ல ஐ.பி.எல் சீசனும் அமைந்திருக்கிறது. ஆனால் அவர் தென்ஆப்பிரிக்காவிற்காக நான்கு நாட்கள், பர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் இதுவரை விளையாடிதில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர் சிலபல பர்ஸ்ட் கிளாஸ் மேட்ச்கள் விளையாட வேண்டும். பர்ஸ்ர் கிளாஸ் மேட்ச் அனுபவம் இல்லாமல் அவரை சர்வதேச கிரிக்கெட்டில் தள்ளுவது முறையற்றது. நாம் அவரைக் கவனமாக பொறுப்பாக அணுகுவது, அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டை எளிமையாக்கும்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -