“இந்தியாவில் ரன் எடுப்பதில் அவர் மாஸ்டர்.. வெற்றி எங்களுக்குதான்” – ஜோ ரூட் அதிரடியான கருத்து

0
287
Root

இந்தியா இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது முதல் போட்டியில் விளையாடி வருகின்றன.

இந்த முதல் போட்டியில் மூன்றாவது நாளில் முதல் செஷன் வரை போட்டி முழுக்க முழுக்க இந்தியாவின் கைகளில் இருந்தது. ஆனால் கடைசி இரண்டு செஷன்களில் தன் மிகச் சிறப்பான பேட்டிங் மூலம் 148 ரன்கள் குவித்து போட்டி இங்கிலாந்தையும் கொண்டு வந்தார் போப்.

- Advertisement -

தற்பொழுது போட்டி நடைபெற்று வரும் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நான்காவது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 150 ரன்களில்தான் இருக்கிறது. தற்பொழுது இங்கிலாந்து ஆறு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

எனவே மேற்கொண்டு நாளை இங்கிலாந்து 50 – 60 ரன்கள் சேர்க்கும் பொழுது, அது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை தடுத்து நிறுத்தி, இங்கிலாந்து அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய மண்ணில் வெற்றி பெறவும் வைக்கலாம். எனவே இந்த போட்டி தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் கூறும்பொழுது “இங்கிலாந்தின் கிரிக்கெட்டில் இது ஒரு அற்புதமான நாள். நாங்கள் பந்துவீச்சில் மிக சிறப்பாக இருந்தோம். துவக்க வீரர்களாக கிரவுலியும், டக்கெட்டும் தொடர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

உலகில் இந்தப் பகுதியில் ரன்கள் எடுப்பது எப்படி என்பதில் போப் ஒரு மாஸ்டர் கிளாஸ் பேட்டிங் விளையாடி இருக்கிறார். அழுத்தத்தின் கீழ் அவர் அருமையான முடிவுகளை எடுத்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்ததோடு எங்களையும் இந்த போட்டிக்குள் கொண்டு வந்து விட்டார்.

போப்பை பற்றி ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிக் கொண்டிருந்த பொழுதும், அவர் பீல்ட் பற்றி மிகவும் தெளிவாக இருந்தார்.

இதையும் படிங்க : “போப் அசத்திட்டார்.. நாங்க இன்னும் 40-50ரன்கள் எடுத்தாலே இந்திய அணிக்கு தலைவலிதான்” – கிரவுலி பேட்டி

ஆடுகளம் பந்துவீச்சுக்கு மிகவும் அருமையாக இருக்கிறது. இன்று காலை நாங்கள் பந்துவீச்சில் செயல்பட்ட விதத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் எப்பொழுதும் வெற்றிகரமான நிலையில் இருக்க விரும்புகிறோம். அதை நோக்கியே பயணிக்கிறோம். நாங்கள் எப்படி விளையாடி வருகிறோமோ அதை அப்படியே தொடர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.