ஜடேஜாவை விட இவர்தான் பெஸ்ட்.. நீங்களே பாருங்க.. ஆதாரங்களை இறக்கிய முன்னாள் இந்திய வீரர்!

0
1796
Jadeja

தற்போது நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை சந்திப்பதற்கு இந்திய அணி நிர்வாகம் புதுவிதமான திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது.

என்னவென்றால், எட்டாவது இடம் வரை பேட்டிங்கை நீட்டிப்பது, பந்துவீச்சாளர்களிடம் இருந்து கணிசமான ரன்களை பெறுவது என, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாகத்தான் ஏழாவது இடத்தில் இடது கை சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இருக்கும் பொழுது, மற்றும் ஒரு இடது கை சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேலை அணிக்குள் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கொண்டு வந்தது.

ஆனால் இதில் இந்திய அணிக்கு வித்தியாசமான தலைவலி உருவாகி இருக்கிறது. ஜடேஜா சமீபத்தில் விக்கெட் எடுக்கிறார் ஆனால் பேட்டிங்கில் தடுமாறுகிறார். அக்சர் பேட்டிங் நன்றாக செய்கிறார் ஆனால் விக்கெட் எடுப்பதில்லை. மேலும் அவர் தற்போது காயம் அடைந்து இருக்கிறார்.

இவர்கள் இருவரையும் குறிப்பிட்டு இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “ஜடேஜா ஆட்டமிழந்த 45 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டால், அவரது சராசரி 15 ரன்கள் என குறைகிறது. இது நல்ல விஷயம் கிடையாது. இதில் நிறைய முறை ஒற்றை இலக்க ரன்களில் அவர் ஆட்டம் இழந்து இருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த ஆண்டில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 243 பந்துகள் விளையாடி ஒன்பது பவுண்டரிகள் அடித்து ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் இருக்கிறார். இது சற்று அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

தற்போது உலகக்கோப்பை வர இருப்பதால், இதையெல்லாம் மாற்றிக்கொண்டு அவர் நல்ல முறையில் செயல்படுவார் என்று நம்புகிறேன். நாம் பேட்டிங்கில் எட்டாவது இடம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் ஏழாவது இடமே சரியில்லாமல் இருக்கிறது.

அதேவேளையில் அக்சர் படேலின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சராசரிகள் மேம்பட்டு உள்ளது. நேர்மையாக எடுத்துக் கொண்டால் இது வலிமையற்ற அணிகளுக்கு எதிராகத்தான் வந்திருக்கிறது. அவர் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 300 ரன்கள் 30 ரன்கள் சராசரியில் எடுத்திருக்கிறார். இதில் ஸ்ட்ரைக் ரேட் 106. இரண்டு அரை சதங்கள் இருக்கிறது. இது நல்ல விஷயம்தான். இந்த வகையில் அக்சர் படேல் நன்றாகவே இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!