“என்னைய பாக்குற மாதிரியே இருக்கு.. இந்தியாவுக்கு இப்ப இவர்தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்” – யுவராஜ் சிங் கருத்து!

0
210
ICT

இந்திய அணியின் சிறந்த இடதுகை பேட்ஸ்மேன்களை எடுத்துக் கொண்டால் அதில் யுவராஜ் சிங்குக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஒரு இடது கை பேட்ஸ்மேனாக இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் நிறைய செய்திருக்கிறார்.

அவருடைய அறிமுக ஆட்டத்தில் இருந்து இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது வரை, மிகப்பெரிய போட்டிகளை, எதிர்பாராத வகையில் பிரம்மாண்டமாக விளையாடி வெள்ள வைப்பதில் யுவராஜ் சிங் மிகப்பெரிய லெஜன்ட்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன் ஆக யுவராஜ் சிங்கின் இடம் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கிறது என்கின்ற சோகம் தொடர்ந்து கொண்டே இருந்தது. கடந்த ஆண்டுகளில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவீந்திர ஜடேஜா தவிர பேட்ஸ்மேன் என்று ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட கிடையாது.

இப்படியான நிலையில்தான் தற்பொழுது ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சாய் சுதர்சன் மற்றும் ரிங்கு சிங் என ஒரு இடதுகை பேட்டிங் பட்டாளமே இந்திய கிரிக்கெட்டுக்குள் நுழைந்து இருக்கிறது. இதில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்த வீரராக பினிஷிங் ரோல் செய்யும் ரிங்கு சிங் இருக்கிறார்.

பேட்டிங் செய்ய கடினமான இடத்தில் களம் இறங்கி, ஆட்டத்தின் சூழ்நிலையை மிக நன்றாக உணர்ந்து, எந்தவித பதட்டத்தையும் பரபரப்பையும் பேட்டிங்கில் மற்றும் உடல் மொழியில் காட்டாமல், மிகவும் அமைதியாக வேலையை கச்சிதமாக செய்யக் கூடியவராக இருக்கிறார்.

- Advertisement -

இவர் குறித்து பேசி உள்ள யுவராஜ் சிங் கூறும் பொழுது ” ரிங்கு சிங் தற்பொழுது இந்திய அணியில் சிறந்த இடது கை ஆட்டக்காரர். அவர் என்னை எனக்கு ஞாபகப்படுத்துகிறார். எப்பொழுது அடித்து விளையாட வேண்டும் என்பதை அவர் நன்கு அறிந்தவராக இருக்கிறார். மேலும் அவர் அழுத்தத்தின் கீழ் பெரிய புத்திசாலியாக விளங்குகிறார். அவரால் போட்டிகளை வெல்ல முடியும்.

நான் அவர் மீது ஏதும் தனிப்பட்ட அழுத்தங்களை கொடுக்க விரும்பவில்லை. ஆனால் நான் இந்திய அணிக்கு என்ன செய்தேனோ அதைச் செய்யக்கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. பேட்டிங்கில் ஐந்து மற்றும் ஆறாம் இடங்களில் ஒரு பினிஷர் ஆக ஆட்டத்தை முடிக்கும் இடத்தில் அவர் இருக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்.