“அவரால்தான் அணி இப்படி இருக்கிறது ; அவர் இந்திய அணியின் சொத்து”- சக வீரரை புகழ்ந்து தள்ளிய தினேஷ் கார்த்திக்!

0
673
DK

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து இருக்கிறது. இந்த தொடரின் முதல் ஆட்டம் பஞ்சாப் மாநிலத்தில் மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

இதையடுத்து இரண்டாவது ஆட்டம் நேற்று நாக்பூரில் நடந்தது. மழை பெய்து மைதானத்தில் ஈரம் காயாது இருந்த காரணத்தால் போட்டி தாமதமாக 8 ஓவர்கள் கொண்டு துவங்கியது. ஒரு பந்து வீச்சாளர் 2 ஓவர்கள் பந்துவீசி கொள்ளலாம். பவர் பிளே 2 ஓவர்கள் என்று விதி அமைக்கப்பட்டது.

- Advertisement -

இந்த விதியின் காரணமாக ஒரு அணிக்கு 4 பவுலர்கள் அல்லது 5 பவுலர்கள் இருந்தால் போதுமானது. இந்திய அணியில் ஆறு பவுலர்கள் இருந்தார்கள். இதனால் புவனேஸ்வர் குமார் வெளியே அமர வைக்கப்பட்டு ரிஷப் பண்ட் உள்ளே வந்தார். மேலும் ஜஸ்பிரித் பும்ராவும் அணிக்குள் வந்தார்.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 90 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 4 பந்துகள் மீதம் வைத்து 92 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கொண்டு தொடரை சமன் செய்தது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆஸ்திரேலிய அணியின் டேனியல் சாம்ஸ் வீசிய முதல் பந்தை தினேஷ் கார்த்திக் சிக்சருக்கு தூக்கி அடித்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு அடித்து ஆட்டத்தை மிக எளிமையாக முடித்து வைத்தார். அவருக்கு தரப்படுகின்ற பினிஷர் ரோலுக்கு சரியான பொறுப்பை நேற்று நிறைவேற்றினார்.

இதற்குப்பிறகு நேற்றைய ஆட்டம் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் “இன்று எங்களுக்கு 8 அவர்களை முடிக்க நான்கு பந்துவீச்சாளர்கள் தேவை. எங்கள் ஒரு பந்து வீச்சாளரால் 2 ஓவர்கள் வீச முடியும். ஆனால் எங்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் 5 பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். இப்படி 5 பந்துவீச்சாளர்கள் இருப்பது ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு உலகத்தரமான ஆல்ரவுண்டர் அணியில் இருப்பதால் சாத்தியம் ஆகிறது ” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஹர்திக் பாண்டியா 11 பேர் கொண்ட அணியில் இருக்கும் பொழுது, 11 பேர் கொண்ட அணி சமநிலை கொண்டதாக இருக்கும். அவர் அணியில் இருக்கும் பொழுது ஒரு கூடுதல் பந்துவீச்சாளர் இல்லை ஒரு கூடுதல் பேட்ஸ்மேனை வைத்து ஆட முடியும். இதுதான் அவர் அணியில் இருந்தால் உங்களுக்கு கிடைக்கும் வசதி. இதுவே அவரை சிறப்பான ஒருவராக மாற்றுகிறது ” என்று கூறியிருக்கிறார்.