“என் பையன் டி20 உலககோப்பையையில் இல்லாதது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது” – உம்ரான் மாலிக் தந்தை ஆச்சர்யமான பேட்டி!

0
273

“டி20 உலககோப்பையில் உம்ரான் மாலிக் இடம்பெறாமல் போனது எனக்கு மகிழ்ச்சி தான்” என உம்ரான் மாலிக் தந்தை பேட்டியளித்துள்ளார்.

இளம் வேகபந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், ஐபிஎல் போட்டிகளின் மூலம் பலரையும் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக, 150 கிலோமீட்டர் வேகத்தில் இவர் பந்துவீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பதால் இந்திய அணியில் விரைவாக இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

முதலாவதாக ஆசியகோப்பை தொடரில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொடுக்கப்படவில்லை. அதன் பின்னர் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் நிச்சயம் இடம் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அப்போதும் இவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

நடுவில் பும்ரா காயம் காரணமாக உலககோப்பை அணியில் இருந்து விலகினார். அப்போதும் உம்ரான் மாலிக் சரியான மாற்று வீரராக இருப்பார். ஆஸ்திரேலியா மைதானம் இவரது வேகப்பந்து வீச்சிற்கு நன்றாக எடுபடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை என்பதால் பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

டி20 உலககோப்பை தொடர் முடிந்த பிறகு ஒருநாள் மற்றும் டி20 தொடர் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் உம்ரன் மாலிக் அறிமுகப்படுத்தப்பட்டார்.

- Advertisement -

இப்போட்டியில் ரன்களை வாரி கொடுத்தாலும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதைப்பற்றி இவரது தந்தை அப்துல் ரஷீத் மன நிகழ்ச்சியுடன் பேட்டி அளித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“உம்ரான் மாலிக் டி20 உலககோப்பைக்கு தேர்வு செய்யப்படவில்லை என முதலில் மக்கள் என்னிடம் கூறினர். அதை நாங்கள் பெருமிதமாகத்தான் எடுத்துக் கொண்டோம். ஏனெனில் ஒருவருக்கு எப்போது எது நடக்குமோ, அது சரியாக நடக்கும். எதையும் விரைவாக நடந்துவிட வேண்டும் என எண்ணக்கூடாது.” என்றார்.

மேலும், “கிரிக்கெட்டில் தற்போது நிறைய கற்றுக் கொண்டு வரும் சிறுவன் அவர். மிகப்பெரிய வீரர்களுடன் விளையாடி வருகிறார். அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டு இன்னும் நன்றாக செயல்படுவார் என நம்புகிறேன். முழுமையாக கற்றுக் கொள்ளட்டும். அதன் பிறகு அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் உரிய முறையில் கிடைக்கும்.

“உம்ரான் மாலிக் கவனிக்கப்படாமல் செல்ல மாட்டார். தற்போது அவருக்கு கிடைத்துவரும் அங்கீகாரம் நிச்சயம் மகிழ்ச்சியை தருகிறது. அதேநேரம் தவறு செய்வதிலிருந்து இன்னும் நிறைய கற்றுக்கொண்டு மேன்மேலும் உயர செல்ல வேண்டும்.”

“முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது மகன் நாட்டிற்காக விளையாடுகிறார். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?. ஒட்டுமொத்த உலகமும் அவர் விளையாடுவதை பார்த்து வருகிறது. இது இன்னும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.”

“முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்றாலும், இத்துடன் இது முடியப்போவதில்லை. இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. அதில் உம்ரான் நன்றாக செயல்படுவார் என எண்ணுகிறேன்.” என்றார்.