ரன்கள் அடிக்கவில்லையென விராட் கோலிக்கு கவலையே இல்லை – சஞ்சய் மஞ்ரேக்கர் கடும் விமர்சனம்!

0
36

மோசமான பார்மில் இருக்கிறோம், ரன்கள் அடிக்கவில்லை என்பது பற்றி விராட் கோலிக்கு கவலையே இல்லை என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சமீபத்திய பேட்டிங் தொடர்ந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு இவரது சராசரி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் குறைவாக இருக்கிறது. கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை.

- Advertisement -

அனைத்துவித கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகிக் கொண்டதால் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் பலர் விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றனர். 2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை மற்றும் 2021 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி எதிர்பார்த்த அளவிற்க்கு செயல்படாததும் இவரது பேட்டிங்கை பாதிக்கிருக்கலாம் என மற்றொரு பக்கம் விமர்சனங்கள் வருகின்றன.

சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விராட்கோலி, ஒரு நாள் தொடரில் 33 ரன்கள், டி20 தொடரில் 12 நாட்கள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் என மிகவும் குறைவான ரன்களையே அடித்திருந்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆசிய கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் விராட் கோலியின் பெயர் இடம்பெற்று இருக்கிறது.

இந்த சூழலில் விராட் கோலியின் மீது சற்று கடுமையான விமர்சனத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் வைத்திருக்கிறார். “விராட் கோலி நிறைய ரன்கள் அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்குகிறார். இதன் காரணமாக எத்தனை ரன்கள் அடிக்கிறார்? எப்போது ஆட்டம் இழக்கிறார்? என்பதை பற்றி துளியும் கவலைப்படாமல் இருக்கிறார். அடுத்த போட்டி அடுத்த போட்டி என்பதை மட்டுமே பார்த்து, தவறுகளை சரிசெய்வதில்லை.

- Advertisement -

புதிதாக உருவாகி வரும் இந்திய அணியில் விராட் கோலிக்கு பக்கபலமாக எதுவும் இல்லை என்பது அவரது ஆட்டத்தில் இருந்தே தெரிகிறது. தற்போதைய சூழலுக்கு அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் விரைவில் அணியிலிருந்தும் நீக்கப்படலாம். மேலும் முதல் பந்தில் இருந்தே பவுண்டரி அடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இது விராட் கோலியின் இயல்பான ஆட்டம் இல்லை. அணி நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு விராட் கோலிக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது, மேலும் அவரிடம் இருந்து எத்தகைய பங்களிப்பு இந்திய அணிக்கு தேவை என்பது பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.” என்றார்.

இந்த ஆண்டு இதுவரை நான்கு டி20 போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி 81 ரன்கள் அடித்திருக்கிறார். அவரது சராசரி 20.25 ஆகும். சாதாரணமாக 50-க்கும் மேல் சராசரி வைத்திருக்கும் இவர், சமீபகாலமாக 30க்கும் கீழே சராசரிகளில் விளையாடி வருவது அணிக்கு சாதகமாக அமையாது. அவரது அனுபவமும் பேட்டிங் பங்களிப்பும் இந்திய அணியின் அடுத்த அடுத்த தொடர்களின் வெற்றிக்கு நிச்சயம் தேவை. ஆசிய கோப்பையில் விராட் கோலி இடம்பெற்று இருக்கிறார். நிச்சயம் பிளேயிங் 11ல் இருப்பார். அவரது ஆட்டம் நாளுக்கு நாள் மோசமாக சென்றால் அடுத்த அடுத்த தொடர்களில் இந்திய அணிக்கு அது ஆரோக்கியமானதாக அமையாது.” என்றும் சஞ்சய் மஞ்ரேக்கர் குறிப்பிட்டார்.