“ஹாட்ஸ் ஆஃப் ஜடு… மிரட்டிட்ட…” தாறுமாறாக பாராட்டிய முன்னால் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்!

0
431

பதினாறாவது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிப் போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் வைத்து கோலாகலமாக நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டு இருந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த போட்டி கனமழையின் காரணமாக திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற தோனி குஜராத் அணியை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டார். குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 96 ரன்கள் குவித்தார். இவருடைய அபார ஆட்டத்தால் குஜராத் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இரண்டாவது பேட்டிங் தூங்குவதற்கு முன்பாக மழை குறிக்கின்றது. மேலும் மூன்று பந்துகள் வீசிய நிலையில் கன மழை பெய்ததால் போட்டி நீண்ட நேரம் தடைப்பட்டது. நள்ளிரவு 12 10 க்கு துவங்கிய போட்டியில் 15 ஓவர்களில் 171 ரன்கள் சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்கள் அமைத்துக் கொடுத்த அருமையான துவக்கத்தினால் சிஎஸ்கே அணி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. ருத்ராஜ் மற்றும் கான்வே இருவரும் ஆட்டம் இழந்த போதும் ரகானே அம்பத்தி ராயுடு மற்றும் சிவம் துபே ஆகியோர் அதிரடியாக ஆடி சென்னை அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர்.

இறுதி ஓவரில் ஆறு பந்துகளுக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் மோகித் சர்மா முதல் நான்கு பந்துகளை மிகச் சிறப்பாக வீசினார். இறுதி இரண்டு பந்துகளில் 10 எண்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியின் மூலம் சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் ஆல் கவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இந்த வெற்றியின் மூலம் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே அணி. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் சாதனையையும் சமன் செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். இது குறித்து பேசிய அவர் “ரவீந்திர ஜடேஜா இக்கட்டான சூழ்நிலையில் இருந்து சென்னை அணிக்கு அருமையான ஒரு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார். குஜராத்தின் மைந்தன் சென்னை அணிக்காக குஜராத் மண்ணிலே ஒரு லட்சம் மக்கள் முன்னிலையில் வெற்றியைத் தேடிக் கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” ஜஎன்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ரவீந்திர ஜடேஜாவிற்கு கடந்த வருட ஐபிஎல் தனிப்பட்ட முறையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. அதையெல்லாம் கடந்து இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிக முக்கியமான நேரத்தில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சிஎஸ்கே அணியின் வெற்றி கைநழுவி போய்விட்டது என்று எல்லோரும் நினைத்த நேரத்தில் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் அவருக்கு தலை வணங்குகிறேன் என்று கூறியிருக்கிறார்” இர்பான் பதான்.