ஐபிஎல் 2024: இதுவரை வந்து சேராத ஹசரங்கா.. குறைந்த சம்பளம் தான் காரணமா.? – மேனேஜர் விளக்கம்

0
2279
Wanindu Hasaranga IPL 2024

டி20 லீக்குகளில் மிகவும் புகழ்பெற்ற தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சில வீரர்களை தவிர அனைத்து வெளிநாட்டு பேர்களும் தங்களது அணியில் இணைந்து விட்டனர்.

ஆனால் இலங்கையின் முன்னணி சுழற் பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்கா கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது இரு போட்டிகளில் விளையாடிவிட்ட போதிலும், ஹசரங்கா இன்னும் தன் அணியுடன் இணையாமலே இருக்கிறார். அது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளிவராத நிலையில் தற்போது தான் குறைந்த விலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் ஹசரங்கா ஐபிஎல்லைப் புறக்கணித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- Advertisement -

இலங்கை அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக கருதப்படும் ஹசரங்கா, முதன்முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல்லில் விளையாடினார். 2022 ஆம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர் பெங்களூர் அணி 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அந்த சீசனில் பெங்களூர் அணிக்காக மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு போட்டியில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததே ஐபிஎல்லில் இவரின் சிறந்த பந்துவீச்சாகக் கருதப்படுகிறது.

ஆனால் 2023ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக எட்டு போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார். இதன் காரணமாக பெங்களூர் அணி அவரை தக்கவைக்க விரும்பவில்லை. அணியில் இருந்து அவரை கழட்டி விட்ட பின்னர் சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரைக் குறைந்த விலைக்கு பதிவு செய்தது.

அதிகத் தொகைக்கு பெங்களூர் அணியில் விளையாடிவிட்டு குறைந்த தொகைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாட விருப்பமில்லை என்று ஐபிஎல்லைப் புறக்கணித்து விட்டதாக ஒரு தகவல் பரவிய நிலையில் தற்போது ஹசரங்காவின் மேலாளர் அந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்றும் அவர் விரைவில் அணியில் இணைவார் என்றும் கூறியிருக்கிறார் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது

- Advertisement -

ஐபிஎல் 2024-ல் வனிந்து ஹசரங்க

“ஹசரங்கா தனது இடது கணுக்காலில் பிரச்சனை இருப்பதால் அது குறித்து பரிசோதனை செய்வதற்காக மார்ச் 31ஆம் தேதி வெளிநாடு செல்கிறார். அவர் சன்ரைசர்ஸ் அணியில் விரைவாக இணைவார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். பணம் ஒரு காரணியாக அவருக்கு இருந்திருந்தால் நாங்கள் அவரின் ஐபிஎல் அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாய்க்கு பதிவு செய்திருக்கலாம்.குறைவான ஆட்டங்கள் குறைவான பணத்தினை குறிக்கிறது. அவர் தனது உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் இலங்கையின் கேப்டனும் கூட “என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: மயங்க் யாதவ் சமர் ஜோசப்.. 2 பேரும் ஒன்னா ஒரே போட்டியில் ஆடுவாங்களா.? – லக்னோ நிக்கோலஸ் பூரன் நச் பதில்

மேலாளர் கூறியதைப் போலவே ஹசரங்கா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்தால் பந்துவீச்சு மிகவும் வலுவடையும். சுழற் பந்துவீச்சை பொறுத்தவரை சபாஷ் அகமது மட்டுமே இப்போது நன்றாக வீசிக் கொண்டிருக்கிறார். எனவே ஹசரங்காவும் அணியில் இணைந்தால் சுழற் பந்துவீச்சு மேலும் வலுவடையும். மேலும் முத்தையா முரளிதரனும் எஸ்ஆர்எச் அணியில் பயிற்சியாளராக இருப்பதால் ஹசரங்காவிற்கு பந்து வீச்சில் பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.