இந்திய இளம் வேகப் பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா தன்குறித்து வெளியில் பேசப்படும் கருத்துக்கள் பற்றி எந்த கவலையும் தனக்கு கிடையாது என அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்திய அணியில் பயிற்சியாளர் கம்பீரின் செல்லப்பிள்ளை ஹர்ஷித் ராணா என பலரும் வெளியில் கூறுகிறார்கள். மேலும் அவருக்கு மட்டும் தொடர்ந்து மூன்று வடிவத்திலும் வாய்ப்பு கொடுப்பது குறித்து வெளியில் நிறைய விமர்சனங்கள் சென்று கொண்டிருக்கிறது. இதைப் பற்றி இன்று மனம் திறந்து ஹர்ஷித் ராணா பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசி இருக்கும் ஹர்ஷித் ராணா கூறும்பொழுது “என் குறித்து வெளியில் பேசப்படும் கருத்துக்களை கேட்டு மனதில் வைத்துக் கொண்டு நான் களத்தில் இறங்கினால், என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என்று நான் நினைக்கிறேன். எனவே அவற்றை தவிர்க்க நான் முயற்சி செய்கிறேன். நான் என் விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். என்னைப் பற்றி வெளியில் பேசப்படும் கருத்துக்கள் குறித்து எனக்கு கவலை கிடையாது”
“நான் என்னுடைய கடின உழைப்பில் கவனம் செலுத்துகிறேன். மேலும் மைதானத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன். முதல் போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்ற காரணத்தினால் நான் இந்த திட்டங்களை மாற்றிக் கொள்ளப் போவது கிடையாது. தொடர்ந்து இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்கு நான் முயற்சி செய்வேன்”
“எங்களுடையது ஒரு மகிழ்ச்சியான ட்ரெஸ்ஸிங் ரூம். இங்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இங்கு இருக்கின்ற காரணத்தினால் அற்புதமான சூழ்நிலை நிலவுகிறது”
இதையும் படிங்க : கம்பீர் சொல்ற அத கேட்க முடியாது.. விராட் கோலி காட்டும் பிடிவாதம்.. பிசிசிஐயில் பிரச்சனை – வெளியான செய்திகள்
“ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் என்னை போன்ற இளம் வீரர்கள் அனைவருக்கும் அணியில் சிறந்த திட்டங்கள் மற்றும் உற்சாகத்தை கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட அனுபவ வீரர்கள் உங்களுக்கு வழிகாட்ட இருக்கும்பொழுது, உங்களுடைய டிரெஸ்ஸிங் ரூம் எப்பொழுதும் உற்சாகமானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.