தற்போது இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இடையே பனிப்போர் சென்று கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தற்போது ஒரே ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். மேலும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் போட்டிகள் குறைவாக இருப்பதால் அவர்களுக்கான போட்டி பயிற்சியும் குறைவாக இருக்கும் என்பது சிக்கலை உருவாக்குகிறது.
விராட் கோலியின் பிடிவாதம்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிக்கு பிறகு பேசிய விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட் மனதில் இருந்து உருவாவதாகவும், அதிகமாக பயிற்சி செய்வதின் மூலம் உருவாவதில்லை எனவும் கூறியிருந்தார். இதன் மூலம் அவர் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என மறைமுகமாக தெரிவித்து இருந்தார்.
மேலும் லண்டனில் வசித்து வரும் விராட் கோலிக்கு அங்கு சிறப்பான பயிற்சி வசதிகள் இருக்கிறது. அவர் அங்கு தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுகிறார் என்ற செய்திகளும் வருகிறது. அதேசமயத்தில் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இருவரும் விராட் கோலி உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என விரும்புகிறார்கள். இது தற்போது சிக்கலை உருவாக்கி இருக்கிறது.
ரோஹித் சர்மா சம்மதம்
மேலும் இந்திய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தயாராக இருப்பதாக தெரிகிறது. எனவே விராட் கோலிக்கு மட்டும் விதிவிலக்காக சலுகை கொடுத்தால் அது சரியானதாக இருக்காது என இந்திய கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது. இருந்த போதிலும் விராட் கோலி திட்டவட்டமாக உள்நாட்டு கிரிக்கெட் விளையாட முடியாது என்று தெரிவித்து விட்டதாக செய்திகள் கூறுகிறது.
இதையும் படிங்க : கம்பீர் தான் நான் பணியாற்றியதிலே பெஸ்ட் பயிற்சியாளர்.. அந்த மாதிரி ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது.. ஆப்கான் வீரர் குர்பாஸ் நெகிழ்ச்சி
இதுகுறித்து வெளியான செய்தியில் “இங்கு பிரச்சனையே விஜய் ஹசாரே டிராபியில் விராட் கோலி விளையாடுவதில் தான் இருக்கிறது. ஒருபக்கத்தில் ரோகித் சர்மா விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலிக்கு மட்டும் சலுகை கொடுப்பது சரியாக வராது” என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.






