சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இடம் பெறவில்லை. இதனால் அவருக்கு பதில் யார் இடம்பெறப் போகிறார் என மில்லியன் டாலர் கேள்விக்கு ஹர்ஷித் ராணா என்ற பதிலை கௌதம் கம்பீர் அறிவித்திருக்கிறார்.
முஹமது சிராஜ் ஏற்கனவே அணியில் தேர்வு செய்யப்படாத நிலையில் டி20 நட்சத்திரமான ஆர்ஸ்தீப் சிங் இருந்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல ஜாம்பவான்களும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஆர்ஸ்தீப் சிங்குக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் அதனை கம்பீர் கேட்காமல் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு தந்து இருக்கிறார்.
3 விக்கெட் வெறும் 2 பவுண்டரி:
சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடரில் ஹர்சித் ரானா என்ன செய்யப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தன் மீது எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு தன்னுடைய பந்துவீச்சு மூலம் ஹர்சித் ரானா பதில் அளித்திருக்கிறார். வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தான் வீசிய முதல் ஓவரிலேயே ஹர்ஷித் ராணா விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.
கடும் வெப்பம் நிலவும் துபாயில் ஆடுகளத்தில் கொஞ்சம் கூட வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் இல்லாத நிலையில் ஆக்ரோஷமாக ஒரு குதிரை போல் ஓடி வந்து பந்து வீசினார். இதன் மூலம் ஹர்ஷித் ரானாவுக்கு மூன்று விக்கெட்டுகள் கிடைத்தது. 7.4 ஓவர்கள் வீசிய ஹர்ஷித் ரானா 31 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.இதில் அவருடைய எக்கனாமி 4 என்று அளவில் இருக்கின்றது.
பும்ரா கற்று தந்த பாடம்:
ஹர்ஷித் ராணா தன்னுடைய ஓவரில் வெறும் இரண்டு பவுண்டரிகள் மட்டும் தான் வழங்கியிருந்தார். இதன் மூலம் ஹர்ஷித்ராணா நான்கு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சுக்கு பும்ரா கொடுத்த அட்வைஸ் தான் காரணம் என்று ஹர்ஷித் ராணா கூறியிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “பும்ராவுடன் நான் ஆஸ்திரேலியா தொடரில் அதிக அளவு ஒன்றிணைந்து பணிபுரிந்தேன். இதன் மூலம் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். பும்ராவுக்கு அதிக அனுபவம் இருக்கின்றது. ஒவ்வொரு விதமான கிரிக்கெட்டிலும் எப்படி பந்து வீச வேண்டும் என்று அவர் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: என் பவுலிங் இந்த 2 விஷயத்தை நம்பி மட்டுமே இருக்கும்.. ஸ்பெஷல் திட்டம் இல்லாமதா வருவேன் – முகமது சமி
ஒரே மாதிரி சிறப்பாக செயல்படுவது எப்படி என்பதை நான் அவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்” என ஹர்ஷித் ராணா தெரிவித்துள்ளார். இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டி வரும் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறுகிறது இது ஹர்ஷித் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுகிறது.






