முதல் பந்தில் விக்கெட்.. ஆனால் தோனிக்காக ஹர்சல் படேல் செய்த விஷயம்.. புகழும் சிஎஸ்கே ரசிகர்கள்

0
30142
Dhoni

இன்று சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தரம்சாலா மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் ஹர்சல் படேல் மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டை கைப்பற்றி, ஆனால் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. இதற்கான காரணம் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இன்று டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசமுடிவு செய்தது. சிஎஸ்கே அணிக்கு வழக்கம்போல் ரகானே ஆரம்பத்திலேயே வெளியேறினார். இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஒரு ருதுராஜ் மற்றும் டேரில் மிச்சம் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ராகுல் சாஹரின் பந்துவீச்சில் கேப்டன் ருதுராஜ் 21 பந்தில் 32 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்த பந்திலேயே சிவம் துபே கோல்டன் டக் ஆனார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டேரில் மிட்சல் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் 19 பந்தில் 30 ரன்கள் எடுத்தது வெளியேறினார்.

அடுத்து மொயின் அலி, சான்ட்னர், சர்துல் தாக்கூர் தொடர்ச்சியாக வெளியேற, மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் இந்த முறை அவர் ஹர்ல் படேலின் முதல் பந்திலேயே கிளீன் போல்ட் ஆகி கோல்டன் டக் ஆனார். இருந்த போதும் அரசியல் படேல் மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டுக்காக கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. முடிவில் சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. அரசியல் படையில் நான்கு ஓவர்களுக்கு 24 ரன்கள் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

பின்பு இது குறித்து பேசி உள்ள ஹர்சல் படேல் பேசும் பொழுது ” நான் ஆடுகளத்தை முதலில் தவறாக கணித்து விட்டேன். இந்த ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நகர்ந்து சென்றாலும் கூட, ஆடுகளம் வறண்டு மெதுவாகததான் காணப்பட்டது. மேலும் நான் தோனி அவர்களின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதன் காரணமாகவே நான் அவருடைய விக்கெட்டை கைப்பற்றிய பொழுது கொண்டாடவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க: வந்த வேகத்தில்.. மீண்டும் இலங்கை திரும்பிய பதிரானா.. கலக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்.. காரணம் என்ன?

பகல் போட்டியில் விளையாடும் பொழுது பந்து ரிவர்ஸ் ஆகும். இன்றும் எனக்கு அப்படி நடந்தது. நான் மெதுவான யார்க்கர் பந்துகளில் வேலை செய்கிறேன். நீங்கள் எந்த அளவுக்கு அதிகம் பந்துவீசி இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு ரிசல்ட் கிடைக்கும். நான் வலைகளில் இதை வெளிப்படுத்தும் பொழுது பேட்ஸ்மேன்கள் இதை கணிப்பதற்கு சிரமப்படுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.