30 பந்தில் 71 ரன்கள் அடித்த பிறகும் இந்தியா தோல்வி; தோல்விக்கு பிறகும் பாண்டியா சொன்ன வார்த்தை இதுதான்!!

0
540

30 பந்துகளில் 71 ரன்கள் அடித்த பிறகும் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதன்பிறகும் துவண்டு போகாமல் ட்வீட் செய்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு இது முன்னோட்டமாகும்.

- Advertisement -

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க ஜோடி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். ரோகித் சர்மா 11 ரன்களுக்கு அவுட் ஆனார். விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய கேஎல் ராகுல் மிகச்சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து, 55(35) ரன்களுக்கு வெளியேறினார். அவருடன் சேர்ந்து விளையாடிய சூரியகுமார் யாதவ் 46(25) ரன்கள் எடுத்தார். 5வது வீரராக வந்த ஹர்திக் பாண்டியா ஆட்டம் இந்தியாவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. 30 பந்துகளில் 5 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 71 ரன்களை விளாசினார். இந்திய அணியின் ஸ்கொர் 200 ரன்களை கடந்தது. 20 ஓவர்களில் முடிவில் 208 குவித்தது.

இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் களம் இறங்கினார்கள். சற்று கடினமான இலக்கு என்பதால் முதல் ஓவரில் இருந்தே டாப் கியரில் விளையாடினர். பின்ச் 22 ரன்களுக்கு அவுட் ஆனார். இளம் வீரர் கேமரூன் கிரீன் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்து, 30 பந்துகளில் 4 சிக்ஸர் 8 பவுண்டரிகள் உட்பட 61 ரன்கள் அடித்தார்.

கிரீன் அக்சர் படேல் ஓவரில் ஆட்டமிழக்க, உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணியின் பக்கம் ஆட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் டிம் டேவிட் இருவரும் இந்திய அணியின் வெற்றி கனவை சிதைத்து விட்டார்கள். மேத்யூ வேட் 21 பந்துகளில் 45 ரன்களை இரண்டு சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் நொறுக்கி இறுதிவரை களத்தில் நின்று ஆஸ்திரேலிய அணியை வெல்ல வைத்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவின் மிகச்சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. இந்த இலக்கை எளிதாக கட்டுப்படுத்தி விட முடியும் என எதிர்பார்க்கப்பட்ட போது, மோசமான பந்துவீச்சால் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

30 பந்துகளில் 70 ரன்கள் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியதால் சற்று மனம் உடைந்து காணப்பட்டாலும், துவண்டு போகாமல் நம்பிக்கை அளிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா. அதில், “தவறிலிருந்து கற்றுக்கொள்வோம். அதை சரி செய்து கொள்வோம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களாகிய உங்களுக்கு மிகப்பெரிய நன்றி.” என்று குறிப்பிட்டு இருந்தார்.