“ஹர்திக் ஸ்ரேயாஸ் இடத்தில் வரவேண்டும்.. சூர்யாவோட மறுபக்கம் இனிமேல்தான் பார்க்க போறிங்க!” – அதிரடி ஸ்டேட்மென்ட் உடன் களமிறங்கிய முன்னாள் வீரர்கள்!

0
1125
Surya

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டுமல்லாது மூன்று துறையிலும் இந்திய அணி நல்ல நிலையில் இருக்கிறது.

மேலும் இந்திய அணியில் யார் உள்ளே வாய்ப்பு பெற்றாலும் அவர்கள் போட்டியில் தங்களுடைய தாக்கத்தை பதிவு செய்யும் அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்திய அணியின் பெஞ்ச் வலிமையை இது காட்டுகிறது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் இல்லாத காரணத்தினால் அவருடைய இடத்தை நிரப்ப இரண்டு வீரர்கள் தேவைப்பட்டார்கள். இதன் காரணமாக சர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு முகமது சமி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவருக்கும் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இதில் முகமது சமி நியூசிலாந்துக்கு எதிராக தனக்கு கொடுக்கப்பட்ட முதல் வாய்ப்பையே மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். மேலும் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக மீண்டும் தன்னுடைய தரத்தை நிரூபித்தார்.

சூரியகுமார் யாதவ் எதிர்பாராத விதமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் வாய்ப்பில் ரன் அவுட் ஆகி தவறவிட்டார். ஆனால் இரண்டாவது வாய்ப்பில் பேட்டிங் செய்ய கடினமான லக்னோ ஆடுகளத்தில் 47 பந்துகளுக்கு 49 ரன்கள் எடுத்து, இந்திய அணியை 200 ரன்களை கடக்க வைத்தார்.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணியின் ஒரே பலவீனமாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்து வருகிறார். அவர் தொடர்ச்சியாக ஷார்ட் பந்துகளில் ஆட முடியாமல், தவறான முறையில் விளையாடி தனது விக்கெட்டை மிகவும் மலிவான முறையில் பறிகொடுத்து வருகிறார். தற்பொழுது பயிற்சிக்கு திரும்பிவிட்ட ஹர்திக் பாண்டியா அணிக்குள் வரும்பொழுது, அவர் ஸ்ரேயாஸ் இடத்தில் வரவேண்டும் என்கின்ற கோரிக்கைகள் எழ ஆரம்பித்திருக்கிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் ஜதின் பரஞ்சபே கூறும்பொழுது “ஞாயிற்றுக்கிழமை சூர்யாவிடம் அந்த கார்டூஸ் மும்பைக்கார பேட்ஸ்மேனை பார்த்தீர்கள். அவர் தனது பேட்டிங்கின் மறுபக்கத்தை காட்ட தயாராக இருந்தார். மேலும் ஹர்திக் திரும்பி வரும்போது என்ன செய்ய வேண்டும் என்று என்னை கேட்டால், சூர்யா அணியில் தொடர்வதை நான் பார்க்க விரும்புகிறேன். ஸ்ரேயாஸ் வெளியில் செல்ல வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தீப் தாஸ் குப்தா கூறும்பொழுது “இது 250 ரன்கள் அடிக்கக்கூடிய ட்ராக் கிடையாது. 240 ரன்கள் சரியாக இருக்கும் என்று சூர்யாவுக்கு தெரியும். அதற்கேற்ப அவர் உடனே தனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டார்!” என்று கூறியிருக்கிறார்,