“ஹர்திக் பாண்டியாவுக்கு ஐபிஎல்-ல் தடை விதிக்கனும்” – பொங்கி எழுந்த முன்னாள் கொல்கத்தா டீம் டைரக்டர்!

0
671
Hardik

2024 17வது ஐபிஎல் சீசனுக்கான அணிகள் வீரர்களை வெளியிடுவது இரண்டு நாட்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது.

மேலும் வீரர்களை ஒரு அணியில் இருந்து நேரடியாக இன்னொரு அணி வாங்கிக் கொள்ளும் டிரேடிங் முறைக்கு கடைசி நாளாக டிசம்பர் 13ஆம் தேதி வரை இருக்கிறது.

- Advertisement -

இந்த டிரேடிங் வகையில் மிகப்பெரிய நிகழ்வாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த அணியை விட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டு இருக்கிறார்.

இது சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. ஏனென்றால் ஒரு வீரர் ஒரு குறிப்பிட்ட அணிக்கு செல்ல வேண்டும் என்று விரும்புவது ஐபிஎல் விதிப்படி தவறு. இரண்டு அணி நிர்வாகங்கள் மட்டும் தான் இந்த விஷயத்தை முடிவு செய்ய வேண்டும்.

2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல நேரடியாக ரவீந்திர ஜடேஜா பேசியதன் காரணமாக ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் சமூக வலைதளத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குனர் விக்ரம் சோலங்கி ஹர்திக் பாண்டியாவுக்கு பிரிவு வாழ்த்து செய்தி அனுப்பியதில், அவருடைய உணர்வுகளை மதித்து அவருடைய முடிவை ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் பார்த்தால் ஹர்திக் பாண்டியா இதை முதலில் விரும்பி இருக்கிறார் என்பதாகவே தெரிகிறது. இந்த இடத்தில் தான் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் வருகிறது.

இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜோய் பட்டாச்சாரியா கூறும் பொழுது “2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகி நேரடியாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பேச்சுவார்த்தை நடத்திய ரவீந்திர ஜடேஜா ஒரு வருடம் தடை செய்யப்பட்டார்.

தற்போது ஹர்திக் பாண்டியா விஷயத்தில் நடந்து இருப்பதும் இதே
போல்தான் இருக்கிறது. இதை ஐபிஎல் அணி நிர்வாகங்கள் தொடர்ச்சியாக ஊக்குவிக்க கூடாது. இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால் இது இங்கு ஒரு பழக்கமாகவே மாறிவிடும். நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் வீரர்கள் இதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு மாறுவார்கள். இல்லையென்றால் இது தவறான போக்காக அமைந்து விடும்.

குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியா விஷயத்தில் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தது. ஒன்று அவரை வெளியேற்றிவிட வேண்டும். மற்றொன்று அவரை வெளியே அனுப்பாமல் தொடர்ச்சியாக வைத்து விளையாட வேண்டும்.

அப்படி தொடர்ச்சியாக விளையாடும் பொழுது அவர் சுமாரான ஒரு பங்களிப்பை தருவார். அதை குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்றுக் கொள்ள வேண்டும். எனவேதான் அவர்கள் அனுப்புவதை சிறந்தது என்று அனுப்பி விட்டார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை!” என்று கூறியிருக்கிறார்!