கங்கா சந்திரமுகி ஆன கதை.. தோனி, சிஎஸ்கே வை காப்பி அடித்த ஹர்திக் பாண்டியா.. விவரம் இதோ!

0
7606

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட போது அந்த அணி நிர்வாகம் தவறான முடிவு எடுத்து விட்டதாக பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியா களமிறங்கிய முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

இதன் மூலம் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைத்தது. இந்த நிலையில் நடப்பு சீசனிலும் ஹர்திக் பாண்டியா அணியை சிறப்பாக வழி நடத்தி தற்போது விளையாடிய பத்து போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க வைத்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி அளித்த ஹர்திக் பாண்டியா கேப்டனான கதையை கூறினார். மும்பை அணியில் இருந்து வெளியே வந்தவுடன் எனக்குத் தெரிந்த நபருக்கு கீழ் விளையாட வேண்டும் என நினைத்தேன். கே எல் ராகுல் எனக்கு நெருங்கிய நண்பர். இதனால் அவருடைய தலைமையில் விளையாட முடிவு செய்தேன்.

அப்போதுதான் குஜராத் அணியிலிருந்து எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். எனக்கு எப்போதும் கிரிக்கெட் தொடர்பான யோசனைகள் யுத்திகள் தெரியும். கேப்டன் பதவியில் இருப்பதற்கு முன்பு நான் பலருக்கு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன்.

கேப்டன் பொறுப்பை ஏற்ற உடன் ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேனோ அதேபோல் நான் செயல்பட வேண்டும் என நினைத்தேன். வீரர்களுடன் நட்பாக பழகினேன். எனக்கு இதில் ஒரு முன்மாதிரி என்றால் அது தோனி தான். தோனிக்காக அணி வீரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

- Advertisement -

இங்கிருந்து குதி என்று சொன்னால் கூட குதித்து விடுவார்கள். தோனி ஒரு கேப்டனாக என்னை கவர்ந்திருக்கிறார். இதனால் அவருடைய சாயல் என்னுடைய கேப்டன்ஷிப்பில் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு அணியின் சூழல் சிறப்பாக இருந்தால் அந்த அணி நிச்சயம் வெற்றி பெறும். ஒரு வீரர்களை எப்படி பார்த்துக் கொள்வது என்பதை நான் சிஎஸ்கே அணி நிர்வாகத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டேன்.

ஒரு அணியை சிறந்த அணியாக வழிநடத்துவது இரண்டு வழி இருக்கிறது. ஒன்று தலைசிறந்த வீரர்களை தங்களது அணியில் வைத்துக் கொள்வது, இன்னொன்று நல்ல வீரர்களை அணியில் தேர்வு செய்து அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வருவது .இதில் மும்பை அணி முதல் யுத்தியை பயன்படுத்தியது. சிஎஸ்கே அணி இரண்டாவது யுத்தியை பயன்படுத்தியது. எனக்கு இதில் சிஎஸ்கே வின் வழி தான் பிடித்திருக்கிறது என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.