வாய்ப்பை உருவாக்கினோம்..! ஹர்திக் பாண்டியா வென்றது இப்படி தான்

0
72

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 188 ரன்களில் ஆட்டம் இழந்தது.

- Advertisement -

இதன் மூலம் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 20 ஆண்டுகளில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச முதல இன்னிங்ஸ் ஸ்கோர் இதுவாகும். இதனால் இந்திய அணி இந்த இலக்கை எளிதில் எட்டி சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அங்கு தான் ஆட்டத்தில் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டது. இந்திய அணி வீரர்கள் வந்த வேகத்தில் ஃபெவிலின் திரும்ப ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி இருந்தது. ஆனால் ராகுல் மற்றும் ஜடேஜா ஜோடி அபாரமாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதில் ராகுல் 75 ரன்களும் ஜடேஜா 45 ரன்களும் அடித்து அசத்தினர்.

இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலுமே நாங்கள் நெருக்கடியை சந்தித்தோம். எனினும் நாங்கள் ஆட்டத்தில் முழு குறியாக இருந்து கடுமையாக போராடி சிக்கலில் இருந்து வெளியே வந்தோம். ஒரு கட்டத்தில் ஆட்டத்தில் எங்களுக்கு உத்வேகம் ஏற்பட்டதை நன்றாக பயன்படுத்திக் கொண்டு முழுமையாக ஆதிக்கம் செலுத்தினோம்.

- Advertisement -

இன்றைய ஆட்டத்தில் எங்கள் வீரர்கள் கேட்ச் பிடித்த முறையை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் வாய்ப்புகளை உருவாக்கி அதனை கேட்ச் ஆக பிடித்தோம். அதுவும் ஜடேஜா மற்றும் சுப்மன்கில் இரண்டு பேருமே சிறப்பான முறையில் கேட் செய்தார்கள். ஜடேஜாவை பற்றி பேச வேண்டும் என்றால் அவர் திறமையை இன்று காட்டினார்.

கிரிக்கெட் சில மாதங்கள் விளையாடாமல் இருந்து மீண்டும் அவர் திரும்பினார். கடினமான சூழலில் பாட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார்.மும்பையில் மிகவும் வறண்ட வானிலை நிலவியது. இந்த கடினமான சூழ்நிலையில் கூட நான் மகிழ்ச்சியாக தான் பந்து வீசினேன். ராகுல், ஜடேஜா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய போது நாங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் நம்பிக்கையாகவும், பதற்றமில்லாமலும் இருந்தோம்.

நிச்சயம் இது சிறந்த வெற்றியாகும் எங்கள் அணி வீரர்களின் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். சுழற் பந்துவீச்சாளர்களை நீக்கி  வேகப்பந்துவீச்சாளர்களை ஹரிதிக் கொண்டு பயன்படுத்தியதும் ஸ்லீப்பினர் ஒரு பில்டரை நிற்க வைத்ததும் ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.