ஹர்திக் பாண்டியா காயம்.. வெளியான புதிய அறிக்கை.. இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு.. எப்போது திரும்புவார்?

0
714
Hardik

இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்பொழுது முதல் இடத்தில் இருக்கிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி இங்கிலாந்து, இலங்கை தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகளுடன் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த நான்கு போட்டிகளில் இரண்டு அல்லது ஒரு போட்டிகளை வென்று ரன் ரேட் குறையாமல் இருந்தால் கூட அரை இறுதிக்கு செல்ல முடியும் என்பது உறுதி. எனவே தற்போது இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு எந்த விதமான சிக்கலும் இல்லை.

அதே சமயத்தில் இந்திய அணியில் மாற்று வீரர் இல்லாத தனித்துவமான வீரராக இருந்து வந்த ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தது இந்திய அணிக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயமாக இருந்தது.

இந்த நிலையில் ஆரம்பத்தில் அவர் வருகின்ற ஞாயிறு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட நேராக லக்னோவில் வந்து இந்திய அணி உடன் இணைவார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இதற்கடுத்து அவர் இங்கிலாந்து மற்றும் இலங்கை என இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் விளையாட மாட்டார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு ஓய்வு தரப்படுகிறது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அவரது கணுக்காலில் தசைநார் இழிவு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த காயத்தின் அளவு கிரேடு 1 என்ற அளவில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இப்படியான காயம் சரியாக ஒன்று முதல் மூன்று வாரங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

எனவே தற்பொழுது லீக் சுற்றின் கடைசிப் போட்டிக்கு அதாவது நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்கே ஹர்திக் பாண்டியா வருவார். உறுதியாக அவர் இங்கிலாந்து, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், அவர் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்கும் வந்து விடுவாரா? என்பது உறுதியாக கூறப்படவில்லை என்பதுதான். அவர் குறித்து ஒவ்வொரு நாளும் பிசிசிஐ தரப்பில் இருந்து வரும் அறிக்கைகள் மோசமானதாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை அவர் உலகக்கோப்பை தொடரை தவறவிட்டால் அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை!