ஹர்திக் பாண்டியா மும்பை அணியில்?.. முடிவுக்கு வந்த விவகாரம்.. குஜராத் டைட்டன்ஸ் நீக்கிய வீரர்கள்!

0
2253
Hardik

17 ஆவது ஐபிஎல் சீசனுக்காக வீரர்கள் பரிமாற்றம் மற்றும் வீரர்களை நீக்குவது நடைபெற்று வருகிறது. குறிப்பாக இன்று இதற்கு கடைசி நாள்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் வீரர்கள் பரிமாற்றம் தொடர்பாக மிகப்பெரிய செய்தி ஒன்று சுற்றி வந்தது. அதை மையமாக வைத்து இந்த வருடம் மினி ஏலம் பற்றிய செய்திகள் இருந்தது.

- Advertisement -

குஜராத் அணிக்கு முதல் சீசனிலேயே கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன் வருதிக் பாண்டியா தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்கிறார் என்கிற செய்தி முழுக்க இணையத்தில் இருந்தது.

மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த பல ஆங்கில கிரிக்கெட் இணையதளங்கள் ஹர்திக் பாண்டியா மும்பைக்கு செல்வது உறுதி என்கின்ற தகவலை வெளியிட்டு வந்தன. இதன் காரணமாக ரசிகர்கள் மிகவும் சுவாரசியமான ஒரு டிரேடிங்கை எதிர்பார்த்து இருந்தார்கள்.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஹர்திக் பாண்டியா தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக நீடிக்கிறார். அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் மும்பைக்கு பரிமாற்றம் செய்யவில்லை.

- Advertisement -

கடந்த மூன்று நான்கு நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்து இருந்த இந்த செய்திக்கான முடிவு தெரிந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்துவார்.

இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஐந்து இந்திய வீரர்கள் என மொத்தம் எட்டு வீரர்களை வெளியேற்றி இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் ஓடியன் ஸ்மித், வெஸ்ட் இண்டீஸ் அல்சாரி ஜோசப், இலங்கை டசன் சனகா ஆகிய மூவரும், இந்திய வீரர்களான யாஸ் தயால், விக்கெட் கீப்பர் கேஎஸ்.பரத், பிரதீப் சங்வான், சிவம் மாவி, உர்வில் படேல் என மொத்தம் எட்டு வீரர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.