நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தார். மேலும் கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணிக்கும் துணை கேப்டனாக இருந்தார். இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக அறிவிக்கப்பட்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதற்குப் பிறகு முதல் முறையாக ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்து ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆக மாறினார். இதில் ஆரம்பித்த பிரச்சனை டி20 உலகக் கோப்பையை தொடரை வென்றதும் முடிவுக்கு வந்தது. எனவே இந்திய t20 அணிக்கு ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு அவர் கேப்டன் அவர் என்று எதிர்பார்த்த நிலையில் சூரியகுமார் கேப்டன் ஆக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் முதல்முறையாக பேட்டியளித்திருக்கும் ஹர்திக் பாண்டியா உடல் பயிற்சி மற்றும் உடல் தகுதி குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ” உடல் சோர்வடையாத பொழுதும் மனம் சோர்வடைகிறது.என் வாழ்க்கையில் பல தடவை என் எல்லைகளைக் கடக்கும் பொழுது இப்படி மனம் சோர்வடைந்து இருக்கிறது.அப்படியான நேரங்களில் நான் என் உடலுக்கு அதிக வேலை கொடுப்பேன். ஒரு விஷயத்தை 20 முறை செய்தால் அடுத்த முறை 25 அதற்கு அடுத்த முறை 30 என்று தள்ளுவேன்.
எப்பொழுதும் உங்களுடைய மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். என்னுடைய 16வது வயதில் என்னுடைய பயிற்சியாளர் என்னை 10 புஷ் ஆப் செய்ய சொன்னால் நான் 15 செய்வேன்.அது என் வரம்புகளை அதிகரித்தது. உடற்பயிற்சி அனைவரும் செய்ய வேண்டிய கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இது.
ஒவ்வொரு நாளும் உங்களுடைய தடைகளை தாண்டுங்கள். மனித உடல் கடவுளால் அழகாக படைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் விரும்பும்படி மாற்றி அமைக்க முடியும். அதற்கு கொஞ்சம் கடின உழைப்பு தேவை. என்னுடைய சிறுவயதில் பிட்னஸ் பற்றி பெரிதாக தெரியாவிட்டாலும், நிறைய பயிற்சிகளை செய்தேன். என்னை முன்னோக்கி தள்ளினேன் நிறைய ஓடினேன். இது எனக்கு நல்ல அடித்தளத்தை உருவாக்கியது.
இதையும் படிங்க : 7 விக்கெட் 207 ரன்கள்.. மாறி மாறி பதிலடி கொடுக்கும் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ்.. விறுவிறுப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட்
எனக்கு ஆரம்பத்தில் உடல் பற்றியும், உடல் தகுதி பற்றியும் பெரிய அறிவு இல்லை. ஆனாலும் நான் ஆரம்பத்தில் செய்த விஷயங்களால் எனக்கு ஒரு நல்ல அடிப்படை இருந்தது. எனக்கு இது குறித்த அறிவு ஏற்பட்ட பொழுது அந்த அடித்தளம் எனக்கு பெரிய உதவியாக அமைந்தது. அப்பொழுது நான் மணிக்கு 130 கிலோ மீட்டரில் வீசிக்கொண்டிருந்த பொழுது, அதை 140 என்றும் 142 என்றும் என்னால் மாற்ற முடிந்தது. இப்படித்தான் நான் என்னை தள்ளிக் கொண்டு செல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.