தோனி ரோகித்.. ஐபிஎல் வரலாற்றில் எந்த கேப்டனும் செய்யாத சாதனையை ஹர்திக் செய்ய வாய்ப்பு

0
94
Dhoni

இந்திய கிரிக்கெட் வாரியம் 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை மொத்தம் 16 ஆண்டுகள் ஐபிஎல் டி20 லீக்கை மிக வெற்றிகரமாக நடத்தி வந்திருக்கிறது. துவங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் வருமானம் மற்றும் ரசிகர்களின் ஆதரவில் அடுத்தடுத்த பணிகளை தொட்டு மிகப்பெரிய உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

ஐபிஎல் தொடரின் வெற்றி உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக மாற்றி இருக்கிறது. மேலும் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்புகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பெரிய அளவில் செலவு செய்து வலிமைப்படுத்துவதற்கு ஐபிஎல் வெற்றி முக்கியமானதாக அமைந்திருக்கிறது. இதற்கான பொருளாதாரம் ஐபிஎல் தொடரில் அதிகமாக கிடைக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்களான மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தலா ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். அதாவது நடைபெற்று இருக்கும் 16 ஐபிஎல் சீசன்களில் இந்த இரு அணிகள் மட்டுமே 10 முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கின்றன.

இவர்களுக்கு நடுவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஷேன் வார்னே, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடம் கில்கிறிஸ்ட், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரண்டு முறை கவுதம் கம்பீர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா என மொத்தம் ஐந்து கேப்டன்கள் ஆறு ஐபிஎல் பட்டங்களை வென்று இருக்கிறார்கள்.

ஐபிஎல் வரலாற்றில் அரிய சாதனையை படைக்க ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு

இந்த ஐந்து கேப்டன்களில் டேவிட் வார்னர் மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று கோப்பையை வென்று, அதே சமயத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சென்று, சாலை விபத்தில் ரிஷப் பண்ட் சிக்கிய காரணத்தினால், அவருக்கு பதிலாக கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தார். மற்றவர்கள் ஒரே அணிக்காகமட்டுமே கேப்டனாக இருந்தவர்கள்.

- Advertisement -

மேலும் மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மா இருவருமே தலா ஐந்து முறை கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என ஒரே அணிகளுக்காக மட்டுமே இருக்கிறது. இடையில் 2016 ஆம் ஆண்டு புனே ரைசர்ஸ் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தாலும் கூட அந்த ஆண்டு அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

இதையும் படிங்க : கில் சின்ன பையன் ஆனா நல்ல மனுஷன்.. கண்டிப்பா நான் உதவி செய்வேன் – கேரி கிரிஸ்டன் பேட்டி

இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்து இரண்டு ஐபிஎல் கோப்பையை வென்றவர்களாக, ஐபிஎல் வரலாற்றில் எந்த வீரர்களும் இல்லை. முதல்முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையை வென்று, தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகி இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த அரிய சாதனைக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஏனென்றால் இந்த ஆண்டு அமைந்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கான அதிகபட்ச பலத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றால் ஹர்திக் பாண்டியாவின் பெயர் தனித்துவமான பட்டியலில் இடம் பெறும்!