இது வெட்கக்கேடான ஒன்று.. நான் ஹர்திக் பாண்டியாவை பற்றி என்ன சொன்னேன் – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

0
146
Hardik

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி செயல்பாடு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சுமாராக இருந்ததாக விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பற்றி ஏபி டிவிலியர்ஸ் பேசிய விஷயம் ஒன்று விவாதமாக, அது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா துணிச்சலுடன் செயல்படுவது தனக்கு பிடிக்கும் என்று கூறி ஏபி டிவில்லியர்ஸ் அவரைப் பற்றி பேசி இருந்தார். மேலும் அவருடைய செயல்பாடுகள் ஈகோவால் தொண்டப்பட்டது என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் ஹர்திக் பாண்டியா மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி பாணியை பின்பற்றுவதாகவும், அது அவருடையது கிடையாது எனவும் கூறியிருந்தார். அவருடைய தோனி பாணியிலான கேப்டன்சி இளம் வீரர்களைக் கொண்ட குஜராத் அணியில் எடுபடும், அதே சமயத்தில் சீனியர் வீரர்களை வைத்திருக்கும் மும்பை அணியில் சரி வரவில்லை என்றும் கூறியிருந்தார்.

தற்பொழுது இந்த செய்திகள் வேறு வகையில் புரிந்து கொள்ளப்பட்டு அவருக்கு எதிர்வினை வேறு மாதிரியாக வந்திருக்கிறது. இந்த செய்திகள் கொடுக்கப்பட்ட விதம் தவறாக அமைந்தது அவரை வருத்தப்பட வைத்திருக்கிறது. தற்பொழுது அவர் இது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.

இது குறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “நான் ஹர்திக் பாண்டியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பந்தமாக கூறியது குறித்து நிறைய எதிர்வினைகள் ட்விட்டர் தளத்தில் இருப்பதாக அறிகிறேன். ஜர்னலிசம் மற்றும் ரிப்போர்ட் செய்வது இந்த அளவுக்கு கீழாக இருப்பது மிகவும் வெட்கக்கேடானது. நீங்கள் சிலர் சுட்டிக்காட்டியதை மட்டும் எடுத்துவிட்டு மீதியை அப்படியே விட்டு விடுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் சர்மா 50 வயசு வரைக்கும் விளையாடனும்.. முதல்ல இத நீக்கனும் – யுவராஜ் சிங் தந்தை அதிரடியான பேச்சு

இப்போதும் சொல்கிறேன் எனக்கு ஹர்திக் பாண்டியாவின் துணிச்சலான கேப்டன்சி பிடிக்கும். அதே சமயத்தில் அவர் கேப்டன்ஷியில் காட்டுவது உண்மையான குணம் கிடையாது. ஏனென்றால் மிகவும் அமைதியான ஏபி டி வில்லியர்ஸ் வீட்டில் இருப்பவர். ஆனால் நான் களத்தில் ஆக்ரோஷமாக இருந்திருக்கிறேன். இந்த மாற்றம் ஒரு நடிப்பு. இதைத்தான் நான் ஹார்திக் பாண்டியா விஷயத்திலும் கூறினேன்” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.