சுங்கத்துறை கைப்பற்றிய என் வாட்ச்சின் விலை 5 கோடி எல்லாம் இல்லை – சமூக வலைதளங்களில் பரவும் அவதூறுக்கு ஹர்திக் பாண்டியா விளக்கம்

0
108
Hardik Pandya Watch Seized

இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை முடித்து நேற்று தாயகம் திரும்பியது. விரைவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. மிகவும் சுமாரான உலகக்கோப்பையாக இந்திய அணிக்கு இது அமைந்துள்ளது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா முக்கியமான போட்டிகளில் தன்னை வெளிப்படுத்தாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பதிக் பாண்டியா பற்றி மற்றும் ஒரு புயல் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

அதில் துபாயிலிருந்து திரும்பும்பொழுது ஹர்திக் 5 கோடி மதிப்பிலான கை கடிகாரத்தை துபாயில் இருந்து வரும் பொழுது இந்திய விமான நிலையத்தில் முறைப்படி அறிவிக்காமல் பதுக்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த 5 கோடி மதிப்பிலான கடிகாரத்தை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாகவும் ஹர்திக் பாண்டியாவின் மேல் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் வதந்திகள் பரவி வந்தன.

- Advertisement -

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார் ஹர்திக் பாண்டியா தான் விமான நிலையத்திற்கு வந்த உடனேயே அதிகாரிகளிடம் சென்று தான் அங்கு இருந்து வாங்கி வந்த பொருட்களை ஒப்படைத்ததாக கூறியுள்ளார். மேலும் அவர் வாங்கி வந்த கடிகாரத்தின் மதிப்பு 1.5 கோடி தான் என்றும் சமூக வலைதளங்களில் பரவுவது போல 5 கோடி கிடையாது என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். தான் வாங்கிய அத்தனை பொருட்களுக்குமான ஆதாரங்களை சட்டபூர்வமாக அவர் சமர்ப்பித்து விட்டதாகவும் அவர் எவ்வளவு வரிப் பணம் செலுத்தவேண்டும் என்பதை அதிகாரிகள் ஆய்வுக்குட்படுத்தி கூறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் முழு வரிப் பணத்தையும் தான் கட்ட தயாராக இருப்பதாகவும் தான் சட்டத்திற்குட்பட்டு நடக்கும் சாதாரண இந்திய குடிமகன்களுள் ஒருவன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வேறு ஏதாவது ஆவணங்கள் தேவை பட்டால் கூட தான் சமர்ப்பிக்க தயார் என்று ஹர்திக் கூறியுள்ளார். மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் தனக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இவரது சகோதரர் குருநால் பாண்டியா மீது இதே குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. தற்போது இவர் மீதும் இதே வகையான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகவும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

- Advertisement -