ஐசிசி டி20 ரேங்கிங்.. மாஸ் பண்ணிய ஹர்திக் பாண்டியா அர்ஷ்தீப் சிங்.. ருதுராஜுக்கு நடந்த சோகம்.. புதிய அப்டேட்

0
153
Hardik

தற்போது ஐசிசி வெளியிட்டு இருக்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருவரும் தங்களது சிறந்த நிலையை எட்டி இருக்கிறார்கள்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் மூன்று விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதும் வென்று இருந்தார். ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் கைப்பற்றியதுடன் 16 பந்துகளில் அதிரடியாக ஆட்டம் இழக்காமல் 39 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் இவர்கள் பந்துவீச்சு மற்றும் ஆல் ரவுண்டர் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

- Advertisement -

அர்ஷ்தீப் சிங் – ஹர்திக் பாண்டியா அசத்தல்

ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீத் 721 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் 8 இடங்கள் முன்னேறி இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 642 புள்ளிகள் உடன் 8வது இடத்தைப் பிடித்து முதல் 10 இடத்திற்குள் நுழைந்திருக்கிறார். இதற்கு அடுத்து ரவி பிஸ்னாய் 629 புள்ளிகள் உடன் 12வது இடத்தில் இருக்கிறார்.

மேலும் டி20 கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் 253 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். இந்திய வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 4 இடங்கள் முன்னேறி 216 புள்ளிகள் உடன் 3வது இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் அக்சர் படேல் 145 புள்ளிகள் உடன் 11வது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

அதிகபட்ச உயரத்தில் சூரியகுமார் யாதவ்

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 881 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 807 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஜெய்ஸ்வால் 749 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் தொடர்கிறார்.

இதையும் படிங்க : இவர யாரும் பெருசா கண்டுக்கல.. பும்ராவே இனி வந்தாலும் டீம்ல இவர் கண்டிப்பா இருப்பார் – தமிம் இக்பால் பேட்டி

இதில் இந்திய டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ருதுராஜ் 657 புள்ளிகள் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். முதல் 10 இடங்களில் இருக்கும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு தராதது பெரிய சோகமான நிகழ்வாக அமைந்திருக்கிறது. அதே சமயத்தில் அவருக்கு பதிலாக வாய்ப்பு தரப்பட்ட கில் இந்தப் பட்டியல் அருகில் கூட இல்லை!

- Advertisement -