ஹர்திக் மார்ஸ் வோக்ஸ்.. இதுல யாரு உண்மையான ஆல் ரவுண்டர் தெரியுமா? – இந்திய முன்னாள் வீரர் துல்லிய கணக்கு!

0
166
Hardik

பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது!

தற்பொழுது இதில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களை உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன.

- Advertisement -

இந்தியா ஆகஸ்ட் 30 ஆம் தேதி துவங்கும் ஆறு ஆசிய நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் உலகக் கோப்பைக்கு முன்பாக விளையாட இருக்கிறது. இது உலகக் கோப்பையில் பங்குபெறும் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.

இதேபோல் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் விளையாடுகிறது. இதேபோல் நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்று ஆகஸ்ட் 30ஆம் தேதி 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

தற்பொழுது உலகக்கோப்பை குறித்து எதிர்பார்ப்புகள் நிறைய நிலவி வரும் நிலையில், ஆல் ரவுண்டர்கள் குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “ஹர்திக் பாண்டியாவை எடுத்துக் கொண்டால் கடந்த ஒரு வருடத்தில் அவர் எட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

இந்த எட்டு போட்டுகளில் அவர் 198 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவர் கிட்டத்தட்ட ஒரு போட்டிகளுக்கு ஒரு விக்கெட் என எடுத்திருக்கிறார். ஆனால் ஒரு போட்டிக்கு ஆறு ஓவர்கள் வீதம்தான் அவர் வீசி இருக்கிறார். இது அவ்வளவு சிறந்த ஒன்று கிடையாது.

இந்தியாவின் பார்வையில் இருந்து பார்த்தால் ஹர்திக் பாண்டியா இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. அவரிடம் நாம் எதிர்பார்க்கிறோம். எனவே அவருக்கு சில நேரங்களில் புதிய பந்து வழங்கப்படுகிறது. மேலும் அவர் ஒரு போட்டியில் 25 முதல் 30 பந்துகள் பேட்டிங் செய்கிறார். எனவே இது மோசமான செயல்பாடு கிடையாது. இதனால் அவரது பெயரை ஆல் கவுண்டர் பட்டியலில் வைக்கலாம்.

கடந்த ஒரு வருடத்தில் கிரீஸ் வோக்ஸ் 71 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். மேலும் 6 போட்டிகளில் ஐந்து விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். ஏறக்குறைய எல்லா போட்டியிலும் முழுமையாகவே பந்துவீசி இருக்கிறார். இவர் ஆல்ரவுண்டர் பட்டியலில் இருக்கிறாரா? என்று கேட்டால் நிச்சயம் கிடையாது.

என்னுடைய நினைவுக்கு வரும் அடுத்த பெயர் மிட்சல் மார்ஸ். இவர் ஒரு பெரிய மேட்ச் வின்னர். இவர் ஐந்து போட்டிகளில் 274 ரன்கள் எடுத்திருக்கிறார். இவரது பிரச்சனை என்னவென்றால் இவர் ஐந்து போட்டிகளில் ஏழு ஓவர்கள் மட்டுமே வீசியிருக்கிறார். இவரது பெயர் ஆல்ரவுண்டர் பட்டியலில் இருக்க வேண்டுமா?” என்ற பலத்த கேள்வி எழுகிறது என்று கூறி இருக்கிறார்!