2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 18 ஆவது ஐபிஎல் சீசனில் ஒரு குறிப்பிட்ட அணி கோப்பையை வெல்ல வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு விளையாடி இருக்கும் ஹர்பஜன்சிங் மிகவும் உணர்ச்சிவசமாக கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்கிய நடைபெற இருக்கிறது. இதன் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. மெகா ஏலத்திற்கு பிறகு தொடர் நடக்கின்ற காரணத்தினால் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
ஹர்பஜன் சிங் ஐபிஎல் பாதை
ஹர்பஜன் சிங் மிகச்சிறந்த விளங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு அங்கமாக இருந்தார். மேலும் அவர் அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு இருக்கிறார். இதற்கு அடுத்து அவருடைய கிரிக்கெட் கேரியரின் கடைசி காலத்தில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணிக்காகவும் அவர் விளையாடியிருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு விளையாடிய சில வீரர்களில் இவரும் ஒருவர்.
அதே சமயத்தில் இவர் சொந்த மாநிலம் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் இவர் சிறப்பாக செயல்பட்ட போதிலும் கூட, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இவர் ஏலத்திற்கு வந்த பொழுது பஞ்சாப் கிங்ஸ் இவரை ஒரு முறை கூட வாங்குவதற்கு முயற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் கோப்பையை வெல்ல வேண்டும்
இந்த நிலையில் இவருடைய சொந்த மாநில அணியான பஞ்சாப் கிங்ஸ் இதுவரையில் இரண்டு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஆனால் இந்த முறை தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உருவாக்கி இருக்கும் அணி நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
இதையும் படிங்க : இங்கிலாந்து 100 பந்து தொடர்.. மொத்த 50 பாகிஸ்தான் வீரர்களை புறக்கணித்தது ஏன்? – உண்மை காரணம் வெளியானது
இது குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன் சிங் “இந்த பஞ்சாப் அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஏனென்றால் நான் ஒரு பஞ்சாபி. இத்தோடு ஐபிஎல் தொடரில் ஒரு புதிய அணி சாம்பியன் ஆக வேண்டும் என்றும் விரும்புகிறேன். தயவு செய்து போதும் எனக்கு இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.






