இங்கிலாந்தில் 2021 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் தி ஹண்ட்ரட் எனப்படும் 100 பந்து தொடரில் இந்த முறை எந்த பாகிஸ்தான் வீரர்களும் வாங்கப்படவில்லை. இதற்கான உண்மை காரணம் தற்பொழுது வெளியாகியிருக்கிறது.
உலகெங்கும் டி20 லீக்குகள் 20 ஓவர்கள் கொண்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் புதிய முறையிலான தொடரை 2021 ஆம் ஆண்டு முதல் நடத்திக் கொண்டு வருகிறது. இதில் வழக்கம்போல் இந்திய வீரர்களை தவிர மற்ற கிரிக்கெட் நாடுகளின் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.
50 பாகிஸ்தான் வீரர்களும் வாங்கப்படவில்லை
இந்த நிலையில் இந்த ஆண்டு தொடங்க இருக்கும் இந்த தொடருக்கு ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு மொத்தம் பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் உட்பட 50 வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்திருந்தார்கள். இதில் ஒரு வீரரை கூட எட்டு அணிகளில் ஒரு அணி கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும் சையும் அயுப் வரை வாங்கவில்லை.
அதே சமயத்தில் கடந்த ஆண்டு இந்த தொடரில் மொத்தம் ஆறு பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினார்கள். இந்த ஆண்டு இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் 8 அணிகளில் நான்கு அணிகளை இந்திய முதலாளிகள் வாங்கியிருக்கும் காரணத்தால்தான் பாகிஸ்தான் வீரர்கள் யாரையும் வாங்கவில்லை என்கின்ற செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது உண்மை காரணம் வெளியாகியிருக்கிறது.
உண்மை காரணம் என்ன?
இந்தத் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஜூலை கடைசியில் இருந்து ஆகஸ்ட் முதல் வாரங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் விளையாடுகிறது. இது செப்டம்பர் மாதம் டி20 வடிவத்தில் நடக்க இருக்கும் ஆசிய கோப்பைக்கு தயாராக மிக முக்கியமான தொடர்களாக இருக்கும்.
இதையும் படிங்க : கப் 99% உறுதி.. மும்பை இந்தியன்ஸ் செய்த இதை.. வேற யாராலும் செய்யவே முடியாது – ஆகாஷ் சோப்ரா பேச்சு
இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் சரிவர கிடைக்க மாட்டார்கள் என்பதால் யாரையும் இங்கிலாந்து 100 பந்து தொடரில் எந்த அணியும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் முகமது அமீர் போல பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து நகர்த்தப்பட்ட வீரர்களையும் வாங்கவில்லை. ஏனென்றால் தற்போது பாகிஸ்தானுக்கு விளையாடும் வீரர்களிடம் கூட தரம் குறைந்து விட்டதாக கருதப்படுகிறது. இதுவும் ஒரு பின்னணி காரணமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.