நடப்பு ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் வீரர்கள் வாயில் பேசி போட்டியை தோற்று விட்டார்கள் என ஹர்பஜன்சிங் பாகிஸ்தான் அணியை விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஷாகின் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுப் இருவரும் தொடர்ந்து இந்திய துவக்க ஆட்டக்காரர்களை சீண்டிக்கொண்டே இருந்தார்கள். களத்தில் அடிக்கடி மோதல் வந்தபடியே இருந்தது குறிப்பிடத்தக்கது.
பேசுறதுக்கு போட்டி வச்சா..
இதனால் கடும் கோபமடைந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் துணை கேப்டன் வில் இருவரும் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை மிக எளிதாக மாற்றி விட்டார்கள். இறுதியாக பாகிஸ்தான் தங்கள் வீரர்களின் வாய் பேச்சு காரணமாகவே தோல்வி அடைந்து விட்டது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது “பேச்சுவார்த்தைகளால் போட்டியில் வெல்ல முடியும் என்று இருந்திருந்தால் நிச்சயம் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அது பேட் மற்றும் பந்துக்கு இடையே நடைபெறுகின்ற போட்டி. அதனால்தான் இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட முன்னேறி போட்டியை வென்று விட்டது என்று நான் நினைக்கிறேன்”
அனுபவம் வாய்ந்தவர்களின் தவறு
“பாகிஸ்தான் அணியில் ஷாகின் மற்றும் ஹாரிஸ் இருவரும் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் இருவரும் முதல் ஆறு ஓவர்களில் வாயால் நிறைய செய்தார்கள். அவர்களால் ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியவில்லை. எனவே உங்களுடைய அனுபவ வீரர்கள் மைதானத்தில் கத்திக் கொண்டும் திட்டிக் கொண்டும் எதையும் செய்ய முடியாவிட்டால், நீங்கள் அதற்கான பலன்களை பெறுவீர்கள்”
இதையும் படிங்க : பாக் பேட்ஸ்மேன்கள் இவரை சாதாரணமா நினைச்சாங்க.. ஆனா இந்திய அணி இப்போ ஜெயிக்க அவர்தான் முக்கிய காரணம் – க்ரிஷ் ஸ்ரீகாந்த்
“அவர்கள் இப்படியே பேசிக் கொண்டிருக்கட்டும். நாங்கள் பேட் மற்றும் பந்தை பயன்படுத்தி பேசுகிறோம். தேவைப்படும் பொழுது சிறந்ததை செய்து வெற்றி பெறுவோம் என்று விமர்சனம்” செய்திருக்கிறார்.






