பாக் பேட்ஸ்மேன்கள் இவரை சாதாரணமா நினைச்சாங்க.. ஆனா இந்திய அணி இப்போ ஜெயிக்க அவர்தான் முக்கிய காரணம் – க்ரிஷ் ஸ்ரீகாந்த்

0
83

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் முதலாவது போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை சிறப்பாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய வீரர் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த போது முன்னணி பவுலர்களால் விக்கெட் வீழ்த்த முடியாத நிலையில் ஆல் ரவுண்டர் சிவம் தூபே 58 ரன்கள் குவித்திருந்த பர்ஹானின் விக்கெட்டை வீழ்த்தி முக்கிய திருப்புமுறையை ஏற்படுத்தினார்.

அதுவே பாகிஸ்தான் அணி சரிய முக்கிய காரணமாக அமைந்தது. பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட தூபே 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சிவம் துபேவின் திறமையை மக்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர் என்றாலும் எதிரணி வீரர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர் எனவும் அதுவே அவருக்கு சாதகமாக அமைவதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்திய அணி ரசிகர்கள் சிவம் தூபேவை குறைத்து மதிப்பிடுவதை விட எதிரணி வீரர்கள் அவரை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அது அவருக்கு சாதகமாகவே செயல்படுகிறது. பாகிஸ்தான் வீரர்கள் ஏற்கனவே பும்ரா மற்றும் மற்ற பவுலர்களை தாக்கிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர் அந்த நேரத்தில் பந்து வீசு வந்த போது அவரை ஒன்றும் இல்லாத பந்துவீச்சாளர் என்று நினைத்துக் கொண்டார்கள்.

இதையும் படிங்க:கில் இந்த மாதிரி செஞ்சு இதுக்கு முன்ன பார்த்தது இல்ல.. ஆனா இனி பெருசா நடக்கும் – அஸ்வின் நம்பிக்கை

அவர் எதிர்கொள்ள சாதாரண பந்துவீச்சாளர் என்ற காரணத்தினால் தான் அவரை எதிர்கொள்ள வருகிறார்கள். அவரது விக்கெட்டுகள் அனைத்தும் பேட்டர்கள் சோர்வடைந்து வீழ்த்த முயற்சிக்கின்றன. இன்று அவர் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கு நாம் அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும். அவரால் தான் எங்களுக்கு இந்த முன்னேற்றம் கிடைத்தது” என்று ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.

- Advertisement -