பாக் அணி ஈகோவை விட வேண்டும்.. எங்க பிளேயர்ஸ் கேட்டா இதான் சொல்வாங்க – ஹர்பஜன் சிங் பேட்டி

0
43

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் இந்த தொடரில் பங்கு பெறுவதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் அணி தனது ஈகோவை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி 2025

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. சில பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்து இரண்டு நாடுகள் விளையாடும் போட்டிகள் பொதுவாக ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் அணியும் அதற்குப் பிறகு இந்தியாவில் விளையாடும் போட்டிகளில் பங்கு பெறாது என்று கருத்தை வெளியிட்டது.

மேலும் இந்திய அணிக்கு பாகிஸ்தானில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் எந்தவித தயக்கமும் இன்றி பாகிஸ்தானில் விளையாடலாம் என்றும் கூறியிருந்தது. ஆனால் பிசிசிஐ இதற்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தானில் விளையாடும் போட்டிகள் துபாய் அல்லது அபிதாபி என பொதுவான இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த சூழ்நிலையில் இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டு நாடுகள் விளையாடும் போட்டி ஒரு பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தியது.

- Advertisement -

ஈகோவை ஒதுக்கி வைக்க வேண்டும்

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் அணி தனது ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும், பாதுகாப்பு பிரச்சனைகள் இந்திய அணிக்கு உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணியும் இதுகுறித்து இறுதி முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தோடு கலந்து ஆலோசித்து விட்டு பின்னர் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:பும்ரா கோலியை கொண்டாடுறோம்.. ஆனா டெஸ்ட்ல வெற்றி பெற அடித்தளமே இவர்தான் – கில்கிரிஸ்ட் கருத்து

இந்த சூழ்நிலையில் ஹர்பஜன் சிங் இது குறித்து விரிவாக கூறும்போது “இந்திய வீரர்கள் அனைவரையும் கேட்டால் அவர்கள் அபுதாபி அல்லது துபாயில் விளையாட தயாராக இருப்பதாக சொல்வார்கள். எப்படி இருப்பினும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இதுவரை பார்த்த நிகழ்வுகளில் இதுபோல பார்த்ததில்லை. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களது ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு ஹைப்ரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -