பும்ரா கோலியை கொண்டாடுறோம்.. ஆனா டெஸ்ட்ல வெற்றி பெற அடித்தளமே இவர்தான் – கில்கிரிஸ்ட் கருத்து

0
518

இந்திய அணி வருகிற ஆறாம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் இந்திய வீரர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நிலையில் இதற்காக முன்னணி வீரர்கள் இதற்கு முன்னர் நடைபெற்ற சில தொடர்களில் பங்கு பெறாமல் ஓய்வு எடுத்து வந்தனர். இருப்பினும் இந்திய அணி இதற்கு முன்னர் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தொடர் தோல்வியை சந்தித்திருந்தாலும் தற்போது நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா, ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோரை பெரிதாகக் கொண்டாடி வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்த கேஎல் ராகுல் அறியப்படாத வீரராக இருக்கிறார். இரண்டாவது இன்னிங்ஸில் 176 பந்துகளை எதிர்கொண்டு 77 ரன்கள் குவித்தது இந்திய அணி சிறப்பான அடித்தளம் பெற முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் கே எல் ராகுல் குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கேஎல் ராகுல் அனைத்து வடிவ கிரிக்கெட் தொடரிலும் திறமை மற்றும் புத்திசாலித்தனம் கொண்ட வீரராக இருக்கிறார். அவர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரிடம் நாம் காணும் திறமை மற்றும் ஆற்றல் ஆகியவை நிலைத்தன்மையுடன் இல்லை. அது அவர் மீது தொடுக்கப்படும் விமர்சனமாக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு பல்துறை கிரிக்கெட் வீரர்.

இதையும் படிங்க:ஒரு கேப்டனா ரோஹித் இந்த முடிவை எடுப்பார்.. அதனால இந்த ரிஸ்க் எடுக்க மாட்டார் – சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து

உண்மையை சொன்னால் அவர் அசல் சுற்றுப்பயணத்தில் கூட இல்லை. அவர் பேட்டிங் வரிசையில் முதல் மற்றும் ஆறாம் இடங்கள் வரை விளையாடியுள்ளார். மற்ற வடிவத்தொடர்களில் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய அழைக்கப்படுகிறார். நான் விரும்புவது சிறப்பாக இருக்கும் அவரது திறமை நாட்டிற்காக எந்த வேலையை கொடுத்தாலும் அவர் செய்ய வேண்டும். மேலும் பெர்த் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி சிறப்பாக செயல்பட உதவினார். இளைய வீரர்கள் உடன் பாட்னர்ஷிப் அமைப்பது முக்கியமானதாகும். அதை ராகுல் சிறப்பாக செய்தார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -